இன்றைய வானிலை

09 May, 2024 | 05:55 AM
image

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின்  பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். 

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும்  75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம்  தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை  ஊடாக பொத்துவில்  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள  கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக  காங்கேசன்துறை வரையான அத்துடன் மட்டக்களப்பு  தொடக்கம் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி  காற்று அதிகரித்து வீசக்கூடும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

360 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹாஷிஷ்...

2025-02-16 11:24:57
news-image

மியன்மார் இணையவழி மோசடி முகாமில் இருந்து...

2025-02-16 11:07:47
news-image

விபத்தில் காயமடைந்த இளங்குமரன் எம்.பியை பார்வையிட்ட...

2025-02-16 10:55:45
news-image

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தொடர்பில்...

2025-02-16 11:01:31
news-image

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட உள்ளடக்கம்...

2025-02-16 10:12:56
news-image

இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் கொள்ளையடித்த...

2025-02-16 10:08:34
news-image

இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கும்...

2025-02-16 09:48:30
news-image

புதன்கிழமை இலங்கை வரும் இன விவகாரங்களுக்கான...

2025-02-16 09:42:59
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது கடினம்...

2025-02-16 09:22:20
news-image

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் விரைவில் மீட்கப்படுவர்...

2025-02-16 11:02:59
news-image

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்...

2025-02-16 09:11:44
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை...

2025-02-15 17:53:42