(நெவில் அன்தனி)
ஹைதராபாத் ரஜிவ் காந்தி விளையாட்டரங்கில் புதன்கிழமை (08) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 57ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் போட்டியில் அணி ஒன்று 10 விக்கெட்களால் வெற்றிபெற்றது இதுவே முதல் தடவையாகும். அத்துடன் 10 ஓவர்களுக்குள் 45 நிமிடங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி இலக்கை அடைந்ததும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அபிஷேக் ஷர்மா, ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.
அவர்கள் இருவரும் பவர் ப்ளேயில் 107 ஓட்டங்களைக் குவித்திருந்தனர்.
ட்ரவிஸ் ஹெட் 30 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட 89 ஓட்டங்களையும் அபிஷேக் 28 பந்துகளில் 8 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 75 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குவித்த மொத்த எண்ணிக்கையில் 148 ஓட்டங்கள் 16 பவுண்டறிகளாகவும் 14 சிக்ஸ்களாகவும் வந்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.
மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான நிக்கலஸ் பூரண், அயூஷ் படோனி ஆகிய இருவரது சிறந்த துடுப்பாட்டமே லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவியது.
அணித் தலைவர் கே.எல். ராகுல் (29), குவின்டன் டி கொக் (2), மார்க்கஸ் (3), க்ருணல் பாண்டியா (24) ஆகிய நால்வரும் ஆட்டம் இழக்க 11.2 ஓவர்களில் மொத்த எண்ணிக்கை 66 ஓட்டங்களாக இருந்தது.
இந் நிலையில் நிக்கலஸ் பூரண், அயூஷ் படோனி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 58 பந்துகளில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.
அயூஷ் படோனி 30 பந்துகளில் 9 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களையும் நிக்கலஸ் பூரண் 26 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 48 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
விஜயகாந்த் வியாஸ்காந்த் அறிமுகம்
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இலங்கை சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இந்தப் போட்டியின் மூலம் இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர் மிகச் சிறப்பாக 4 ஓவர்களை வீசி 27 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM