(பா.ருத்ரகுமார்)

சர்வதேசம் இலங்கையின்மீது வைத்திருந்த தவறான அபிப்பிராயங்களும் எண்ணங்களும் தற்போது இல்லாமலாக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் கட்டுமான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் இராணுவ வீரர்களுக்கும் இந்நாட்டு மக்களுக்கும் உண்மையான தோழனாக செயற்படுவதையே சர்வதேசமும் உலகுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.