உலக நாயகனுடன் இணைந்த சிலம்பரசன்

08 May, 2024 | 07:14 PM
image

'உலக நாயகன்' கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் 'தக் லைஃப்' எனும் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியலில் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் இணைந்திருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக் லைஃப்' எனும் திரைப்படத்தில் 'உலகநாயகன்' கமல்ஹாசன், திரிஷா, அபிராமி, நாசர், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர்களுடன் பொலிவுட் கலைஞர்கள் பங்கஜ் திரிபாதி, அலி ஃபைசல், சானியா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இவர்களுடன் நடிகர் சிலம்பரசனும் இணைந்திருக்கிறார். ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பிரம்மாண்டமான எக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் -மெட்ராஸ் டாக்கீஸ் -ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய பட நிறுவனங்கள் ஒன்றிணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் சிலம்பரசன் வித்தியாசமான தோற்றத்துடன் நடித்து வருகிறார். இதனை படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திலிருந்து ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் விலகிய நிலையில், தற்போது சிலம்பரசன் இணைந்திருப்பது பட குழுவினருக்கு புது உற்சாகத்தை அளித்திருக்கிறது.

மணிரத்னம் +கமல்ஹாசன்+ சிலம்பரசன் +ஏ ஆர் ரகுமான் கூட்டணி இணைந்திருப்பதால் 'தக் லைஃப்' படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்