இன்றைய சூழலில் எம் மண்ணில் கல்வி கற்று, அதிக அளவிலான பெறுபேறுகளை பெற்று சித்தியடையும் இளம் தலைமுறையினர்... ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட மேலைத்தேய நாடுகளுக்கும் சென்று, உயர்கல்வி+ தொழில் கல்வி+ சிறப்பு கல்வி+ மொழி அறிவு.. ஆகியவற்றை பயின்று, அங்கேயே பணியாற்றுவதில் தான் பெரு விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய பெற்றோர்களும் வெளிநாடுகளுக்குச் சென்று பிள்ளைகள் சம்பாதித்து அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருந்தால் சந்தோஷம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.
ஆனால் இதற்கான முயற்சியில் இறங்கும்போது கடவு சீட்டு, விசா, உயர்கல்வி கற்பதற்கான கட்டணம், வேலைக்கான நியமன விவகாரம் ... என பல வளமையான நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டு, தடை உருவாகிறது. ஒரு புள்ளியில் பெற்றோர்களும், பிள்ளைகளும் இது தொடர்பான தங்களது முயற்சிகளை கைவிட்டு விட்டு தங்களுக்கு விதிக்கப்பட்ட விதி என நினைத்துக் கொண்டு ஏதேனும் ஒரு வகையில் சமரசம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள்.
ஆனால் வெளிநாடு செல்வதற்கு மாய தடைகள் இருந்தாலோ அல்லது தாமதங்கள் ஏற்பட்டாலோ எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிய பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது வெளிநாடுகளில் செல்வதற்கான தடைகள் அகன்று, வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி கற்று அங்கேயே வேலை பார்த்து சம்பாதிக்கும் நிலை உருவாகும். இந்த பரிகாரத்தை செய்து வெளிநாடு சென்றுள்ள ஏராளமானவர்களின் அனுபவபூர்வமான விடயத்தை தான் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.
தேய்பிறை சதுர்த்தி திதி தினத்தன்று அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகப் பெருமானை வணங்கி இருபத்தியோரு முறை வலம் வந்து உங்களது வெளிநாடு செல்வதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
அதற்கு முன்னர் நீங்கள் மூன்று தேங்காய்களை வாங்கி அதில் மஞ்சள் பொடியினை பூசி ஆலயத்திற்கு எடுத்துச் சென்று, விநாயகரை வணங்குவதற்கு முன்னர் தெற்கு திசையை நோக்கியபடி இரண்டு தேங்காய்களை சிதறு தேங்காயாக உடைக்க வேண்டும். உங்களது கையில் மீதமிருக்கும் ஒரு தேங்காயை சரிபாதியாக உடைத்து அதில் பசு நெய்யை ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதனுடன் வெளிநாடு செல்வதற்கான தடை விலக வேண்டும். வெளிநாடு சென்று கல்வி கற்க வேண்டும். வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும்.. என்ற உங்களது கோரிக்கையை இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த எளிய பரிகாரத்தை தொடர்ச்சியாக மூன்று தேய்பிறை சதுர்த்தி திதி தினத்தன்று செய்தால்... உங்களது வெளிநாடு செல்வதற்கான தடை விலகும். தொடர்ச்சியாக மூன்று மாதத்திற்கு இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வந்தால் வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும்.
எம்மில் சிலர் நாங்கள் சைவர்கள் அல்ல வைணவர்கள். பெருமாளை வணங்குபவர்கள் என்றால். பெருமாள் ஆலயங்களில் தனி சன்னதியுடன் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு வாரம் தவறாமல் புதன்கிழமைகளில் துளசி மாலையை சாற்றி வணங்கி வாருங்கள். சக்கரத்தாழ்வாரை ஒன்பது முறை வலம் வந்து உங்களது கோரிக்கையை சமர்ப்பித்தாலும் வெளிநாடு செல்வதற்கான தடை அகலும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பும் கிட்டும். மகிழ்ச்சியும் பொங்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM