ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் 'பி டி சார்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

08 May, 2024 | 08:31 PM
image

இசையமைப்பாளரும், நடிகரும், இயக்குநருமான ஹிப் ஹொப் தமிழா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பி டி சார்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'குட்டி பிசாசே..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

'நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பி டி சார்' எனும் திரைப்படத்தில் ஹிப் ஹொப் தமிழா, கஷ்மிரா பர்தேசி, அனிகா சுரேந்திரன், தியாகராஜன், முனீஸ் காந்த், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹொப் தமிழா இசையமைத்திருக்கிறார். பாடசாலையில் மாணவர்களுக்கு விளையாட்டை கற்பிக்கும் உடற்கல்வி ஆசிரியர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'குட்டி பிசாசே..' எனத் தொடங்கும் பாடலும் பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் ஹிப் ஹொப் தமிழா எழுதி, பாடி, இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலுக்கான காணொளியில் காதல் குறும்புகள் இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்