அதர்வா முரளி நடிக்கும் 'டி என் ஏ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

08 May, 2024 | 08:31 PM
image

தமிழ் திரையுலகத்தில் அறிமுகமான நட்சத்திர வாரிசுகளில் தனித்துவமான அடையாளத்துடன் ஜொலிக்கும் நடிகர் அதர்வா முரளி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'டி என் ஏ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்', 'ஃபர்ஹானா' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் 'டி என் ஏ'. இந்த திரைப்படத்தில் அதர்வா முரளி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ஷபு ஜோசப் மேற்கொண்டிருக்கிறார்.  எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்காக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் அதர்வாவின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right