எம்மில் சிலருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்ற சில நாட்களுக்குப் பிறகோ அல்லது சில மாதங்களுக்குப் பிறகோ திடீரென முகத்தில் உள்ள தசைகளின் இயக்கத்தில் பாரிய பின்னடைவு ஏற்பட்டு முக தசைகளில் வாத நோய் உண்டாகி முகத்தில் ஒரு பகுதியில் உள்ள தசைகள் பலவீனமடைந்து முடங்கி போகும்.
இத்தகைய பாதிப்பிற்கு முகத் தசை வாதம் என்றும், பெல்ஸ் பால்ஸி என்றும் மருத்துவ மொழியில் குறிப்பிடுகின்றனர். இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். பெற தவறினால்.. நரம்புகள் நிரந்தரமாக சேதமடையக்கூடும். இதன் காரணமாக உங்களது பார்வைத் திறன் முழுமையாக பாதிக்கப்படலாம். மேலும் உங்களது முகத்தில் உள்ள தசைகளின் இயக்கமும் பாரிய பாதிப்பினை எதிர்கொள்ளலாம்.
பெரும்பாலும் முகத் தசை வாதம் என்பது முகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டுமே பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுகிறது. இது தசைகளின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. இதன்போது கண்களை மூடுவதிலும், உணவுகளை மெல்வதிலும், சிரிப்பதிலும், பேசுவதிலும் அசௌகரியங்களும், சிக்கல்களும் ஏற்படக்கூடும். இது ஆண் பெண் என இருவருக்கும் எந்த வயதிலும் ஏற்படலாம்.
முகத்தின் ஒரு பக்க தசைகளை கட்டுப்படுத்தும் நரம்புகளில் வீக்கம் ஏற்படுவதன் காரணமாகவோ அல்லது வைரஸ் தொற்று ஏற்படுவதன் காரணமாகவோ இத்தகைய பாதிப்பு உண்டாகிறது என மருத்துவர்கள் விவரிக்கிறார்கள். மேலும் சிலருக்கு கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் காரணமாகவும், பேரதிர்ச்சி, முக நரம்புகளுக்கு சேதத்தை உண்டாக்கும் காரணிகளாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
முகத்தின் ஒரு பகுதியில் திடீரென்று பலவீனமடைந்து அசௌகரிய உணர்வு சில மணி தியாலங்கள் வரை நீடிப்பது, கண்களை மூடி திறப்பதிலும், வாய் நிறைய புன்னகைப்பதிலும் பின்னடைவு ஏற்படுவது, தாடைகளில் வலி, காது பகுதிகளில் வலி, தலைவலி, சுவை உணர்திறன் இழப்பு, கண்ணீர் மற்றும் உமிழ்நீர் சுரக்கும் அளவுகளில் மாற்றம் ... போன்ற அறிகுறிகள் இத்தகைய பாதிப்புகளை எடுத்துரைக்கிறது.
இதற்கு மருத்துவர்கள் குருதி பரிசோதனை, எலக்ட்ரோ மயோக்ராபி பரிசோதனை, எம் ஆர் ஐ ஸ்கேன் மற்றும் சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இதற்கு முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனுடன் நோயாளிகளுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கி நிவாரணம் மேற்கொள்ளப்படும். சிலருக்கு நரம்புகள் சேதமடைந்து இருந்தாலோ அல்லது நரம்புகளின் அழுத்தம் ஏற்பட்டிருந்தாலோ இதற்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டும் நிவாரணத்தை அளிப்பர்.
வைத்தியர் அருண் விக்னேஷ் தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM