வி.எப்.எஸ். நிறுவனம் 10 ஆண்டுக்குள் 841 மில்லியன் டொலர் இலாபமடையும் - நளின் பண்டார

08 May, 2024 | 04:31 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கி பிணை முறி மோசடியைக் காட்டிலும்  25 மடங்கான மோசடி புதிய விசா முறைமை  ஊடாக இடம்பெறும்.வி.எப்.எஸ் வெளிநாட்டு நிறுவனம் 10 ஆண்டுகால சேவையில் மாத்திரம் 841 மில்லியன் டொலர் இலாபமடையும்.

இதன் பயன் இலங்கைக்குக் கிடைக்காது.இடம்பெறவுள்ள மோசடிகளைத் தடுக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தைப் பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற  இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்,பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் குடியுரிமை தொடர்பில் உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இரட்டை குடியுரிமையை வைத்துக் கொண்டு இவர் கடந்த மூன்றாண்டுகளாகப்  பாராளுமன்றத்தில் செயற்பட்ட விதம் குறித்து மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் காணப்பட்டன.எவ்வாறாயினும் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பைக் கொடுத்து பாராளுமன்றத்தைப் பாதுகாத்துள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் உரத்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று அமைதியாகி விட்டார்கள்.

பிணை முறி கொடுக்கல் வாங்கலில் 10 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.இந்த தொகையைக் காட்டிலும்  25 மடங்கு மோசடி இந்த  புதிய விசா முறைமை  ஊடாக  இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவதற்கு வி.எப்.எஸ்  வெளிநாட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்  தமயந்தி கருணாரத்ன அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிறுவனத்திடமிருந்து 10 ஆண்டுகளுக்குச்  சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு அமைய  வி.எப்.எஸ்.நிறுவனம் 2035 ஆம் ஆண்டு வரை சேவையை முன்னெடுக்கும்.

இக்காலப்பகுதியில்  5.4 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு  வருகை தருவார்கள்  என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் மாத்திரம் இந்த நிறுவனம் 841  மில்லியன் டொலர் இலாபமடையும்.இந்த சேவை கட்டணத்தின் ஊடாக இலங்கைக்குக் கிடைக்கப் பெறும் வருமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் இலத்திரனியல் பயண அங்கீகாரம் எனும் நிகழ்ச்சித் திட்டம் ஊடாக மொபிடெல் நிறுவனம் வெளிநாட்டவர்களுக்கு  விசா வழங்கும் சேவையை முன்னெடுத்தது.

இதற்காக 1 டொலர் மாத்திரமே அறவிடப்பட்டது.ஆனால் புதிய அறிமுகப்படுத்தலுக்கு அமைய  வி.எப்.எஸ் நிறுவனம் சேவை கட்டணமாக 18.50 டொலர் அறவிடுகிறது.இதனால்  பாரிய நிதி மோசடி செய்யப்படும்.

வி.எப்.எஸ் நிறுவனம் கட்டார் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமையில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன.

இந்த ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.ஒப்பந்தம் தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்.அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் போது அவர் தூங்கிக் கொண்டிருந்தாரா? என்பது தெரியவில்லை.

1948 ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் பிரகாரம்  வெளிநாட்டு நிறுவனத்துக்குச் சேவை வழங்கல் ஒப்படைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆகவே இவ்விடயம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தைப் பாராளுமன்றத்துக்கு  அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் புதிய விசா முறைமை தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற பஸ்...

2024-07-19 19:37:39
news-image

வவுனியாவில் உடைந்து வீழ்ந்த வீடு! அதிஸ்டவசமாக...

2024-07-19 18:30:03
news-image

ஜனாதிபதியின் சூழ்ச்சிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அகப்பட...

2024-07-19 18:25:02
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அவுஸ்திரேலியாவின் முன்னாள்...

2024-07-19 17:36:02
news-image

முள்ளிவாய்க்காலில் வீட்டில் உறங்கியவர்களை மயக்கத்தில் ஆழ்த்தி...

2024-07-19 17:35:06
news-image

மூதூர் யுவதி கொலை : சந்தேக...

2024-07-19 17:28:46
news-image

22வது திருத்தம் குறித்த வர்த்தமானி ஜனாதிபதி...

2024-07-19 17:15:58
news-image

மனித மூலதன அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக...

2024-07-19 17:34:54
news-image

ஜனாதிபதியின் செயற்றிட்டம் தொடர்பில் போலியான அறிக்கைகளை...

2024-07-19 16:42:29
news-image

42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2024-07-19 17:15:54
news-image

இணையவழி முன்பதிவு சேவை மீண்டும் செயற்படுகிறது...

2024-07-19 16:47:31
news-image

மதுபான கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்...

2024-07-19 16:37:05