‘பொலிஸாக இருக்கும் நாயகன் தன் வசமுள்ள துப்பாக்கியை தொலைத்துவிடுகிறான். அதிலுள்ள ‘8 தோட்டாக்கள்’ 8 வெவ்வேறு இடங்களில் வெவேறு தருணங்களில் வெடிக்கிறது.

இதன் பின்னணி என்ன? என்பதை ஒரு முழு நீள க்ரைம் திரில்லராக திரைக்கதையமைத்திருக்கிறேன். இதில் புதுமுகம் வெற்றி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மீரா மிதுன் என்ற தமிழ் பேசும் சென்னை பெண்ணை நாயகியாக அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இதில் எம் எஸ் பாஸ்கர் ஏற்றிருக்கும் கேரக்டரும், அவருடைய நடிப்பும் படம் வெளியான பின்பு பேசப்படும். ‘எட்டு தோட்டாக்கள்’,ஏப்ரல் 7ஆம் திகதியன்று வெளியாகவிருக்கிறது.’ என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ்.இவர் இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் என்பதும், நாளைய இயக்குநர் சீசன் 3 இல் வெற்றிப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.