சுகவீனத்தைப் பொருட்படுத்தாமல் விளையாடி மெட்ரிட் சம்பியன் பட்டத்தை வென்றார் ரூப்லேவ்

08 May, 2024 | 04:41 PM
image

(நெவில் அன்தனி)

சுகவீனத்தைப் பொருட்படுத்தாமல் மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் விளையாடிய ரஷ்ய வீரர் அண்ட்றே ரூப்லெவ் சம்பியனாகி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார்.

ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற இறுதிப் போட்டியில் தரவரிசையில் 35ஆம் இடத்திலுள்ள கனேடிய வீரர் பீலிக்ஸ் ஓகர் அலியாசிம்மிடம் கடும் சவாலை எதிர்கொண்ட ரூப்லெவ் 2 - 1  என்ற  செட்கள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானார்.

காய்ச்சலுக்கு மத்தியில் விளையாடிய ரூப்லெவ் முதலாவது செட்டில் 4 - 6 என்ற புள்ளிகள் அடிப்படையில் பீலிக்ஸ்  ஓகர்  அலியாசிம்மிடம் தோல்வி அடைந்தார்.

முதல் செட்டில் தோல்வி அடைந்த போதிலும்  தரவரிசையில் 8ஆம் இடத்திலுள்ள அண்ட்றே ரூப்லெவ் அடுத்த இரண்டு செட்களிலும் மிகத் திறமையாக விளையாடி 7 - 5, 7 - 5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சூடினார்.

அவர் வென்றெடுத்த இரண்டாவது மாஸ்டர்ஸ் 1,000 போட்டி இதுவாகும்.

'இந்த வெற்றி குறித்து சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை' என ரூப்லெவ் கூறினார்.

'கடந்த ஒன்பது தினங்களில் நான் எவ்வாறு விளையாடியிருந்தேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால், என்னால் பட்டத்தை வெல்ல முடியும் என்று நீங்கள் கற்பனை செய்திருக்க மாட்டீர்கள்.

'இந்த வெற்றியினால் நான் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னைக் கவனித்த டாக்டர்களுக்கு முழு புகழும் உரித்தாகுக. அவர்கள் சில தந்திரமான விடயங்களைச் செய்ததால் என்னால் குறைந்தபட்சம் விளையாட கூடியதாக இருந்தது.

'இது என் தொழில் வாழ்க்கையில் மிகவும் பெருமையான பட்டம்  என்று நான் கூறுவேன். நான் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் மிகவும் சிரமப்பட்டேன். நான் இரவில் தூங்கவில்லை. கடந்த மூன்று, நான்கு நாட்களாக நான் தூங்கவில்லை. ஆனால், இன்று எல்லாம் மாறி நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்றார் அவர்.

26 வயதான ரூப்லெவ், ஸ்பெயினின் தலைநகர் மெட்றிட் வருவதற்கு முன்னர் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தார். ஆனால், மெட்றிடில் அவர் வெளிப்படுத்திய அபார ஆற்றல்கள், மூன்று வாரங்களில் ஆரம்பமாகவுள்ள பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிக்கு முன்னர்  அவரை உற்சாகப்படுத்தியிருக்கும் என்பது நிச்சயம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

LPLஇல் நான்காவது தடவையாக முடிசூடா மன்னனானது...

2024-07-22 00:12:05
news-image

ஜெவ்னா கிங்ஸ் நான்காவது தடவையாக சம்பியனானது

2024-07-22 01:29:19
news-image

வடக்கும் தெற்கும் மோதும் லங்கா பிறீமியர்...

2024-07-21 15:57:37
news-image

இந்தியாவுக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடர்;...

2024-07-21 11:48:02
news-image

கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய 2ஆவது தகுதிகாணில்...

2024-07-20 23:50:06
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணத்தில் விஷ்மி...

2024-07-20 22:36:30
news-image

20 வயதின் கீழ் மகளிர் மத்திய...

2024-07-20 11:44:10
news-image

இலங்கையுடனான 2ஆவது இளையோர் டெஸ்டில் இன்னிங்ஸால்...

2024-07-20 10:59:00
news-image

யாழ். மெய்வல்லுநர்கள் இருவர் உட்பட 10...

2024-07-20 01:04:53
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-07-19 20:45:59
news-image

அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ...

2024-07-19 16:06:50
news-image

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு...

2024-07-19 14:47:26