(நெவில் அன்தனி)
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இம்மாதம் 9ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆடவர்களுக்கான மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க லீக் போட்டியில் இலங்கை அணி பங்குபற்றவுள்ளது.
இலங்கை அணியினர் இன்றைய தினம் (08) பாகிஸ்தான் நோக்கி பயணமாகின்றனர்.
இலங்கை கரப்பந்தாட்ட அணியின் தலைவராக தீப்தி ரொமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியின் தலைமைப் பயிற்றுநராக சன்ன ஜயசேகர செயற்படுகிறார்.
'இப்போட்டியை முன்னிட்டு கடந்த சில தினங்களாக எமது அணி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டது. பாகிஸ்தானில் சாதக்க முடியும் என வீரர்களும் நானும் நம்புகிறோம். இலங்கை அணியில் அனுபவசாலிகள் பலர் இடம்பெறுவது அணிக்கு பலம் சேர்க்கிறது' என அணித் தலைவர் தீப்தி ரோமேஷ் தெரிவித்தார்.
இலங்கை கரப்பந்தாட்ட அணி
திப்தி ரொமேஷ் (தலைவர்), மனோஜ் சுரங்க, மலீஷ ரவிஷான், ப்ரனீத் தினேந்த்ர, ஷெஹான் விமுக்தி, சனுக்க மதுபாஷன, வசன்த லக்மால், அயேஷ் தில்ஹான், லஹிரு ப்ரமுதித்த, மஞ்சுல நலின், துலஞ்சன் சந்திப, மகேஷ் வன்னிகமகே, விமுக்தி சாகர.
தலைமைப் பயிற்றுநர்: சன்ன ஜயசேகர, உடற்பயிற்சி ஆலோசகர்: சுசிறி மங்கல, உதவிப் பயிற்றுநர்: நிஷான் இந்திக்க, முகாமையாளர் ஸ்ரீமால் டி சில்வா.
இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் கஞ்சன ஜயரத்ன, செயலாளர் ஏ.எஸ். நாலக்க ஆகியோருடன் இலங்கை கரப்பந்தாட்ட அணியினர் எடுத்துக்கொண்ட படம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM