இன்ட்ராமியுரல் பைப்ராய்ட்ஸை குணப்படுத்தும் நவீன சிகிச்சை.!

Published By: Robert

26 Mar, 2017 | 04:09 PM
image

எம்மில் பல இளம்பெண்களுக்கு திடிரென்று அடிவயிற்றில் வலி ஏற்படும். அத்துடன் தாங்கமுடியாத இடுப்பு வலியும், மாதவிடாயின் போது அதிகளவிலான இரத்தப்போக்கும் இருக்கும். இவர்கள் பயந்து சிகிச்சைக்காக மருத்துவர்களை நாடுவர். மருத்துவர்கள் இவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்குவர்.

இது போன்ற அடிவயிற்று வலி, அதிக இரத்த போக்கு, இடுப்பு வலி இவற்றுடன் மலச்சிக்கல், சிறுநீர் கழித்த பின்னரும் சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கர்ப்பபையில் நார்த்திசுக்கட்டி இருக்கிறதா? என்பது குறித்து பரிசோதிக்க வேண்டும். இத்தகைய பாதிப்பிற்கு உள்ளானவர்களில் ஒரு சிலருக்கு கர்ப்பப்பையில் இரத்த கசிவு கூட ஏற்படக்கூடும்.

இந்நிலையில் பெண்களுக்கு கர்ப்பப்பையில் நார்த்திசுக் கட்டி என்பது இன்ட்ராமியூரல் பைப்ராய்ட், சப்சிரோசில் பைப்ராய்ட், சப்மியூகோசல் பைப்ராய்ட் என மூன்று வகையான கட்டிகள் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

இவ்வகையான தசைக்கட்டிகள், கர்ப்பப்பையில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இதற்கான மருத்துவ காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதில்,சப்சிரோசல் பைப்ராய்ட் கர்ப்பப்பையின் வெளிப்புறத்தில் வரக் கூடியது. இன்ட்ராமியூரல் பைப்ராய்ட் கர்ப்பப்பையின் வெளிப்புறம் மற்றும் உட்சுவர்களில் வரக் கூடியது.சப்மியூகோசல் பைப்ராய்ட் கர்ப்பப்பையின் உட்சுவர் பகுதியில் வருவது. இதனை குணப்படுத்த அப்டாமினல் மயோமெக்டமி, ஹிஸ்ட்ரெக்டமி என பல சத்திர சிகிச்சை முறைகள் உள்ளன. கட்டியின் பாதிப்பு மற்றும் தன்மையை பொறுத்து இத்தகைய சத்திர சிகிச்சை செய்து கட்டிகளை அகற்றலாம். 

தற்போது, மருத்துவ முன்னேற்றம் காரணமாக, இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி என்ற சிகிச்சை முறையிலும் இதனை குணப்படுத்தலாம். டேகேர் ட்ரீட்மெண்ட் போல் காலையில் மருத்துவமனைக்கு வந்து, அன்றே சிகிச்சை முடிந்து திரும்பி விடலாம். அத்துடன் இத்தகைய சத்திர சிகிச்சையின் போது தழும்புகள் கூட ஏற்படாது. 

இருப்பினும் இன்றைய இளம் பெண்கள் கர்ப்பப்பையில் பைப்ராய்ட் கட்டிகளை வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அத்துடன் தங்களின் வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டு, உணவு வகைகளையும் மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும்.

Dr. தீபா

தொகுப்பு அனுஷா. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாக்டூரல் மஸுல் கிராம்ப்ஸ் எனும் இரவு...

2025-02-13 15:44:09
news-image

ஸ்பொண்டிலோலிஸ்டெஸிஸ் எனும் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-02-12 17:05:03
news-image

14,0000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களுக்கு...

2025-02-12 14:15:17
news-image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை...

2025-02-11 16:32:15
news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30