எல்.பி.எல். வீரர்கள் ஏலம் மே 21ஆம் திகதி

08 May, 2024 | 11:53 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலம் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இம் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இம்முறை லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்காக பதிவுசெய்துள்ளனர்.

எனினும் அவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய வீரர்களே ஏலத்தில் வாங்கப்படுவார்கள் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்தளவு எண்ணிக்கை வீரர்கள் தங்களைப் பதிவுசெய்துள்ள போதிலும் 5 அணிகளுக்காக 30 வெளிநாட்டு வீரர்கள் மாத்திரமே ஏலத்தில் வாங்கப்படுவார்கள் என போட்டி ஏற்பாட்டுக் குழு பணிப்பளார் சமன்த தொடங்வல தெரிவித்தார்.

எனவே 500க்கும் மேற்பட்ட வீரர்களிலிருந்து 200 வீரர்களைக் கொண்ட பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு அவர்களிலிருந்து வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு விடப்படுவர் என அவர் குறிப்பட்டார்.

லங்கா பிறீமியர் லீக்கில் பங்குபற்றும் 5 அணிகளும் தலா 6 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் வாங்க முடியும். குழாத்தில் 6 வீரர்கள் இடம்பெற அனுமதிக்கப்படுகின்றபோதிலும் போட்டியின்போது ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்களே விளையாட அனுமதிக்கப்படுவர். விளையாடும் அணியில் இடம்பெறும் மற்றைய 7 பேரும் உள்ளூர் வீரர்களாக இருப்பர்.

அத்துடன் விளையாடும் இறுதி அணியில் 23 வயதுக்குட்பட்ட வீரர் ஒருவர் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏலம் நடைபெறும்போது ஐந்து அணிகளின் உரிமையார்கள், பயிற்றுநர் குழாம் உறுப்பினர்கள், முகாமைத்துவ நிருவாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களை தத்தமது அணிக்கு ஏலத்தில் வாங்குவர்.

ஒவ்வொரு அணியிலும் ஒரு வெளிநாட்டு வீரரும் உள்ளூர் வீரரும் சிறப்பு வீரர்களாக பெயரிடப்படுவர்.

இந்த வருடம் லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முடிவடைந்த பின்னர் ஜூலை 1ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதிவரை நடைபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்