(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல்(விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த திருத்தம் 25 மேலதிக வாக்குகளால் சபையில் தோற்கடிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல்(விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெற்றது. குறித்த சட்டமூல திருத்தத்துக்கு ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக உரையாற்றினர்.
குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பராடே சட்டத்தின் கீழ் பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த தவறும் பட்சத்தில் வங்கி, அது தொடர்பில் எடுக்க முடியுமான சட்ட நடவடிக்கையை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிவரை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கு இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
குழுநிலையில் சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்ள சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகரின் தலைமையில் கூடியபோது,
குறித்த சட்ட திருத்தத்துக்கு அனைவரும் ஆதரவளித்த போதும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிவரை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக தெரிவித்த விடயத்தை எதிர்வரும் 2026 டிசம்பம் 15வரை என திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குறித்த சட்டமூலத்துக்கு திருத்தம் ஒன்றை பிரேரித்தார். என்றாலும் குறித்த திருத்தம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் அதனை தற்போதுள்ள சட்டமூலத்தில் மேற்கொள்ள முடியாது எதிர்காலத்தில் அது தொடர்பில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சட்டமூலத்துக்கு நாங்கள் திருத்தம் ஒன்றை முன்வைத்திருக்கிறோம். அதனை அனுமதிப்பதா இல்லையா என்று அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்றார். அதற்கு சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஏற்றுக்காெள்ள முடியாது என தெரிவித்தார். அதன்போது அந்த விடயம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரினார். அதன பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவரின் திருத்தத்துக்கு வாக்களிப்பு நடத்துமாறு சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அறிவிப்பு செய்தார்.
அதனடிப்படையில் இடம்பெற்ற வாக்களிப்பில் எதிர்க்கட்சித் தலைவரின் திருத்தத்துக்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஒருவர் வாக்களிப்பை தவிந்துகொண்டார். அதன் பிரகவங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த திருத்தம் 25 மேலதிக வாக்குகளால் சபையில் தோற்கடிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM