20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ் அணி

Published By: Vishnu

08 May, 2024 | 02:19 AM
image

ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து டெல்லி அணியின் முன்வரிசை வீரர்களான களம் இறங்கிய வீரர் ஜேக் பிரேசர் 20 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அபிஷேக் போரல் 36 பந்துகளில் 65 ஓட்டங்கள் குவித்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கடைசி நேரத்தில் 20 பந்துகளில் 41 ஓட்டங்கள் சேர்த்தார். குலாபுதீன் 15 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 221 ஓட்டங்களை எடுத்துள்ளது.

இதை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி இலக்காக 222 ஓட்டங்கள் பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடியபோது அந்த அணியின் முன்வரிசை வீரர்களான ஜெய்ஸ்வால் 4 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அணியின் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். ரியான் பராக் 22 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சுபம் துபே அதிரடி ஆட்டம் ஆடி சஞ்சு சம்சனுடன் இணைந்து கூட்டணி அமைத்தார். 50 ஓட்டங்களைக் கடந்து அபாரமாக ஓட்டம் குவித்து வந்த சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 86 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள்முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்