நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்து தொடர்பில் விசாரணை செய்யுங்கள் - ஆளும், எதிர்தரப்பு நீதியமைச்சரிடம் கோரிக்கை

Published By: Vishnu

08 May, 2024 | 01:32 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை தமது ஆட்சியில்  தமது கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்குவதாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் குறிப்பிட்டுள்ளதை அக்கட்சியின் உறுப்பினர் ஹரிணி அமரசூரிய ஏற்றுக்கொள்வாரா என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சபையில் கேள்வியெழுப்பியதை தொடர்ந்து சபையில் அமளி துமளி ஏற்பட்டது.
நீதிமன்றத்தின் அதிகாரத்தை அரசியல் கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்குவது என்று குறிப்பிடுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.ஆகவே இவ்விடயம் குறித்து விசாரணைகளை முன்னெடுங்கள் என ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற  பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும்  வங்கிகளால் வழங்கப்பட்ட  கடன்கள் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்)திருத்தச்  சட்டமூலம் (பராட்டே) என்பன மீதான விவாதத்தில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க , 
மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தமது ஆட்சியில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை செயற்படுத்தும் அதிகாரத்தை தமது  கட்சியின்  உறுப்பினர்களுக்கு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
1971,1988,1989  மற்றும் 2022 ஆகிய காலப்பகுதிகளில் மக்கள் விடுதலை முன்னணி  செயற்பட்ட விதம் நினைவுக்கு வருகின்றது. காட்டுமிராண்டித்தனமாக அரச அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கும் இவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதா ?, என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும். தற்போதைய இளம் தலைமுறையினர் உண்மையை விளங்கிக் கொள்ளமாட்டார்கள்.உணர்வுபூர்வமாக தீர்மானம் எடுத்தால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை தமது கட்சியின்  உறுப்பினர்களுக்கு வழங்குவதாக குறிப்பிட்டதை  தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய ஏற்றுக்கொள்வாரா என்பதனை அவரிடம்  வினவுகிறேன் என்றார்.
இதன்போது எழுந்து பதிலளித்த  பாராளுமன்ற  உறுப்பினர்  ஹரிணி அமரசூரிய  நீதிமன்றத்தின் அதிகார  செயற்படுத்தலை மக்கள் விடுதலை முன்னணிக்கும்,தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் வழங்குவதாக ஒரு போதும் குறிப்பிடவில்லை என்றார்.
இதன்போது ''லால்காந்த குறிப்பிட்டார், லால் காந்த குறிப்பிட்டார்'' என அரச மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள்  கூச்சலிட்டனர்.
தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்  செஹான் சேமசிங்க  ஹரிணி அமரசூரிய போன்ற  படித்த,சிறந்த நபர்  மக்கள் விடுதலை முன்னணி  போன்ற காட்டுமிராண்டித்தனமான கட்சியின் மேடையில் ஏறி தனது கொள்கையை மாற்றிக்கொண்டது கவலைக்குரியது. தவறான  பக்கம் சென்று விட்டார் என்பது மாத்திரம் தெளிவாக விளங்குகிறது என்றார்.
இதன்போது எழுந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, 88 மற்றும் 89 காலப்பகுதிகளில்   நாட்டில் 27 நீதிமன்றக் கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நுகேகொட,கல்கிசை ஹோமாகம,ஆகிய நீதிமன்றங்களின் மீது மிக மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அரச சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. ஹோமாகம நீதிமன்றத்தின் நீதிபதியின் கறுப்பு மேலங்கி பலவந்தமாக கழற்றப்பட்டு மாட்டின் மீது அந்த அங்கி அணிவிக்கப்பட்டு மாடு வீதியில் மேலும்,கீழுமாக விரட்டியடிக்கப்பட்டது.மக்கள் மத்தியில் இன்றும் அந்த அச்சம் காணப்படுகின்றது    என்றார்.
இதன்போது நீதிமன்றம் மற்றும் பொலிஸ் அதிகாரத்தை சாதாரண மக்களுக்கு வழங்குவதனை ஹரிணி அமரசூரிய  ஏற்றுக்கொள்வாரா என அரச மற்றும் எதிரணியின் உறுப்பினர்கள் உரத்த குரலில் கேள்வி எழுப்பினர்.
இதன்போது மீண்டும் எழுந்த  பாராளுமன்ற  உறுப்பினர்  ஹரிணி அமரசூரிய நீதிமன்றத்தின் அதிகாரத்தை கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்குவதனை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.
தொடர்ந்தும் உரையாற்றிய  இராஜாங்க அமைச்சர், செஹான் சேமசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் குறிப்பிட்ட குரல் பதிவு என்னிடம் உள்ளது அதனை ஒலிபரப்ப அனுமதி வழங்குங்கள் என சபைக்கு தலைமைதாங்கிய உறுப்பினரிடம் கேட்டார்.
இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கிய  கிங்ஸ் நெல்சன் அனைவரிடமும் குரல் பதிவு உள்ளது. அனைவரும் ஒலிபரப்பு செய்தால் அது பிரச்சினையாகும் அத்துடன் வெளி நபர்களின் குரல்  பதிவுகளை சபையில் ஒலிபரப்ப முடியாது என்றார்.
இதன்போது ஐக்கிய மக்கள்  சக்தி பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷன ராஜகருண, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் லால்காந்த குறிப்பிட்டதாக கூறும் குரல் பதிவை சபையில் ஒலிபரப்பு செய்து சட்டத்தை தனிநபர் ஒருவர் செயற்படுத்தும்போது அதன் விளைவு பாரதூரமாக அமையும் ஆகவே இவரின் கருத்து எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் இதனை அலட்சியப்படுத்த முடியாது .எனவே இது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென நீதி அமைச்சரிடம்  வலியுறுத்தினார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிரணியின் சுயாதீன உறுப்பினர் சந்திம வீரக்கொடி, 88 மற்றும் 89 ஆம் ஆண்டு காலப்பகுதி கலவரத்தில் போதைப்பொருள் வர்த்தகர்கள், சமூக விரோதிகள் கொலை செய்யப்பட்டார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் அக்காலப்பகுதியில்  விகாரையில் மத நடவடிக்கையில் ஈடுப்பட்டவர்களும்,கர்ப்பிணி பெண்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள்.மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயக அரசியலுக்கு மாறிவிட்டதாக குறிப்பிடப்படுகிறது,ஆனால் இவர்களின் பேச்சில் ஜனநாயகம் வெளிப்படவில்லை.சர்வாதிகாரமே வெளிப்படுகிறது என்றார்.
இதன்போது நீதிமன்றத்தின் அதிகாரத்தை கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்குவதாக குறிப்பிடுவது நீதிமன்றத்தை  அவமதிப்பதாக அமையும் ஆகவே இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-06-15 06:26:02
news-image

பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடுகிறது !

2024-06-14 18:08:19
news-image

நீர்கொழும்பு கடலில் மூழ்கி இரு மாணவர்கள்...

2024-06-14 22:16:30
news-image

தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார் ;...

2024-06-14 22:31:10
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்...

2024-06-14 20:17:48
news-image

நுவரெலியாவில் போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு ...

2024-06-14 20:10:57
news-image

தேர்தல் விவகாரங்களில் தலையிடவில்லை - சர்வதேச...

2024-06-14 17:33:56
news-image

இராணுவம் மீதான யுத்தக் குற்றச்சாட்சியங்களை சேகரிக்கும்...

2024-06-14 19:43:25
news-image

இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையர்களை...

2024-06-14 19:30:54
news-image

வடக்கின் 3 மாவட்டங்களில் 6 இடங்களில்...

2024-06-14 19:26:50
news-image

நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் குறைவடைந்துள்ளன ;...

2024-06-14 19:18:57
news-image

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும்...

2024-06-14 18:28:24