இந்திய வம்சாவளியினரின் இலங்கை வருகையை ஆவணப்படுத்துவதற்கு இந்தியா உதவவேண்டும் - 'கோபியோ' அமைப்பின் தலைவர் குமார் நடேசன்

Published By: Vishnu

07 May, 2024 | 06:54 PM
image

(நா.தனுஜா)

இந்திய வம்சாவளியினர் இலங்கை உள்ளடங்கலாக உலகநாடுகள் எங்கிலும் பல உயர் பதவிகளை வகிப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் 'கோபியோ' அமைப்பின் தலைவர் குமார் நடேசன், சுமார் 250 வருடங்களுக்கு முன்னர் இந்தியர்கள் தொழில் வல்லுனர்களாகவோ, வர்த்தகர்களாகவோ, வங்கியாளர்கவோ, தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களாகவோ இலங்கையை வந்தடைந்தமை தொடர்பான வரலாற்று ஆவணமொன்றை எதிர்வருங்காலத்தில் உருவாக்குவதற்கு இந்தியா உதவவேண்டுமெனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.   

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட சந்தோஷ் ஜாவை கௌரவிக்கும் வகையில் 'கோபியோ' அமைப்பினால் திங்கட்கிழமை (6) கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே 'கோபியோ' அமைப்பின் தலைவர் குமார் நடேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து நாம் இந்த நாளுக்காகக் காத்திருந்தோம். இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான துடிப்பான நல்லுறவையும், உலக அரங்கில் மேம்பட்டுவரும் இந்தியாவின் பிம்பத்தையும் கொண்டாடும் அதேவேளை, எம்மை உயர்ஸ்தானிகருக்கு அறிமுகப்படுத்திக்கொள்வதுடன், எமது கருத்துக்களை அவருடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இங்கு கூடியிருக்கின்றோம். 

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா மிகமுக்கியமான வெற்றிகளை அடைந்திருக்கின்றது. பூகோள பொருளாதாரத்தின் மையமாகவும், தொழில்நுட்ப புத்தாக்கங்களின் தலைமையாகவும், நிலைபேறான அபிவிருத்தியின் முன்னோடியாகவும் இந்தியா மாறியிருக்கின்றது. உலகின் 5 ஆவது அபிவிருத்தியடைந்துவரும் நாடாக விளங்கும் இந்தியா, வெகுவிரைவில் 3 ஆவது இடத்தை அடையுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஜி-7 மாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்பட்டிருக்கின்றது.

ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றது. சந்திராயன் - 3 ஐ சந்திரனின் மிகக்கடினமான பகுதியில் தரையிறக்குவதில் வெற்றியடைந்திருக்கின்றது. குவாட், பிரிக்ஸ் மற்றும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றின் உறுப்பினராகவும் செயற்படுகின்றது. இந்தியாவில் நாளாந்தம் சுமார் 38 கிலோமீற்றர் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டுவருவதுடன், கடந்த சில ஆண்டுகளில் இந்திய விமானநிலையங்களின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது.

அதேவேளை நாம் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் எவ்வித நிபந்தனைகளுமின்றி 4 பில்லியன் டொலர் பெறுமதியான உதவியை வழங்கிய இந்தியாவின் 'அயலகத்துக்கு முதலிடம்' கொள்கைக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். 4 பில்லியன் டொலர் உதவிக்கு மேலதிகமாக இந்திய உதவியின்கீழ் யாழ் கலாசார நிலையம், வீடமைப்புத்திட்டம், சக்திவலு திட்டங்கள், மீன்பிடி துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி போன்றவற்றையும் அனுபவித்துவருகின்றோம்.

அதுமாத்திரமன்றி கொவிட் - 19 பெருந்தொற்றுப்பரவல் காலத்தில் இந்தியா சுமார் 100 நாடுகளுக்கு 24 கோடி தடுப்பூசிகளை அனுப்பிவைத்தமையை மறந்துவிடக்கூடாது. இவையனைத்தும் இந்தியாவுக்கு முன்னெப்போதுமில்லாத வகையில் நம்பிக்கை அளித்திருக்கின்றது. அத்தோடு இவை இலங்கையில் எம்முடைய கௌவரத்தை உயர்த்தியிருக்கின்றது.

இந்திய வம்சாவளியினர் பலர் உலகநாடுகளில் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும், மைக்ரோசொஃப்ட், கூகுள், உலக வங்கி போன்ற கட்டமைப்புக்களின் நிறைவேற்றுப்பணிப்பாளர்களாகவும் கடமையாற்றிவருவதை நான் இங்கு குறிப்பிட்டாகவேண்டும். இலங்கையிலும் இந்திய வம்சாவளியினர் நீதித்துறை, அமைச்சரவை அமைச்சர்கள், ஆளுநர்கள் போன்ற உயர் பதவிகளை வகிப்பதுடன், ஆடைக்கைத்தொழில், தேயிலைக்கைத்தொழில், மருந்து உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் தமது பங்களிப்பினை வழங்கிவருகின்றனர். 

'கோபியோ' அமைப்பானது இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினரை ஒருங்கிணைத்து, பொதுவான அக்கறைக்குரிய விவகாரங்களில் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் கடந்த 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் சுமார் 250 வருடங்களுக்கு முன்னர் தொழில் வல்லுனர்களாகவோ, வர்த்தகர்களாகவோ, வங்கியாளர்கவோ, தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களாகவோ நாம் இலங்கையை வந்தடைந்தமை தொடர்பான வரலாற்று ஆவணமொன்றை எதிர்வருங்காலத்தில் உருவாக்குவதற்கு நாம் இந்தியாவின் உதவியை நாடுகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெடுந்தீவு இளைஞன் படுகொலை - சந்தேகநபர்களை...

2024-06-23 19:22:22
news-image

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம் :...

2024-06-23 19:18:00
news-image

மாணவனைத் தாக்கிய சம்பவத்தில் ஒரே பாடசாலையில்...

2024-06-23 19:38:52
news-image

யாழ்.பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள கொழும்பு சிறுவன்...

2024-06-23 19:19:24
news-image

பொலிசாரின் சன்மான பணத்தை மோசடி செய்த...

2024-06-23 19:34:03
news-image

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணின் சொகுசு காரின்...

2024-06-23 19:13:36
news-image

நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களால் நாட்டுக்கு...

2024-06-23 17:56:58
news-image

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதை செய்வித்தவர்களும்...

2024-06-23 17:41:47
news-image

விவசாயிகளின் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படும்...

2024-06-23 17:35:46
news-image

புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல்...

2024-06-23 18:07:07
news-image

நாளை சகல பாடசாலைகளும் வழமை போன்று...

2024-06-23 16:46:21
news-image

யாழில் கையடக்க தொலைபேசி திருட்டு :...

2024-06-23 16:32:11