மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகளை கோப் மற்றும் நிதி குழுவுக்கு அழைத்து விசாரிக்க முடியும் - சுசில் பிரேம ஜயந்த 

Published By: Vishnu

07 May, 2024 | 06:06 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தின் நிதி குழுவுக்கும் கோப் குழுவுக்கும் அந்த அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை நடத்த முடியும் என சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) அது தொடர்பில் எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) பேராசிரியர் சரித்த ஹேரத் எம்பி கூட்டொன்றை முன்வைத்து குறிப்பிடுகையில், மத்திய வங்கிக்கும் அரசாங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்ற நிலைப்பாட்டில் அந்த வங்கி செயற்படுகிறது அந்த செயற்பாடுகள் பாரதூரமானவை. அந்த அதிகாரிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அந்த விடயம் தொடர்பில் சபையில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்பி குறிப்பிடுகையல்,  புதிய அறிக்கையின் படி மத்திய வங்கி கடந்த வருடத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம் மீட்டியுள்ளது. எனினும் அவர்களின் செயற்பாடுகள் மூலம் 70 வீத சம்பள அதிகரிப்பை மத்திய வங்கி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இது எந்த வகையில் நியாயமாகும்? என்றார்.

இந்த விடயம் தொடர்பில் விமல் வீரவன்ச எம் பி சபையில் தெரிவிக்கையில், சம்பள அதிகரிப்பு ஒரு புறம் இருக்க மத்திய வங்கி தான் ஒரு அரசாங்க நிறுவனமல்ல, அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டியதில்லை என்ற சிந்தனையுடன் செயற்படுவது பாரதூரமான விடயமாகும். அது தொடர்பில் முதலில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அந்த சிந்தனையிலிருந்து மத்திய வங்கியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்றார்.

மேற்படி மூவரின் கேள்விகளுக்கு பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிடுகையில், மூன்று எம்பிக்களும் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும் அத்துடன் மத்திய வங்கியினால் நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ள அறிக்கையை  கோப் குழுவுக்கு கொண்டு வரவும் முடியும். ஏனெனில் மத்திய வங்கி கோப் குழுவுக்கு கட்டுப்பட்ட நிறுவனமாகும். மறுபுறம் அதனை நிதி குழுவுக்கு அழைக்கவும் முடியும். சபாநாயகர் உரிய பணிப்புரை விடுத்தால் அதனை மேற்கொள்ள முடியும் என்றும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் உடைந்து வீழ்ந்த வீடு! அதிஸ்டவசமாக...

2024-07-19 18:30:03
news-image

ஜனாதிபதியின் சூழ்ச்சிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அகப்பட...

2024-07-19 18:25:02
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அவுஸ்திரேலியாவின் முன்னாள்...

2024-07-19 17:36:02
news-image

முள்ளிவாய்க்காலில் வீட்டில் உறங்கியவர்களை மயக்கத்தில் ஆழ்த்தி...

2024-07-19 17:35:06
news-image

மூதூர் யுவதி கொலை : சந்தேக...

2024-07-19 17:28:46
news-image

22வது திருத்தம் குறித்த வர்த்தமானி ஜனாதிபதி...

2024-07-19 17:15:58
news-image

மனித மூலதன அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக...

2024-07-19 17:34:54
news-image

ஜனாதிபதியின் செயற்றிட்டம் தொடர்பில் போலியான அறிக்கைகளை...

2024-07-19 16:42:29
news-image

42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2024-07-19 17:15:54
news-image

இணையவழி முன்பதிவு சேவை மீண்டும் செயற்படுகிறது...

2024-07-19 16:47:31
news-image

மதுபான கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்...

2024-07-19 16:37:05
news-image

ஹல்தும்முல்லயில் “பைனஸ்” வனப்பகுதியில் தீ பரவல்!

2024-07-19 17:38:16