ஜூனில் வெளியாகும் தனுஷின் 'ராயன்'

07 May, 2024 | 08:37 PM
image

ரசிகர்கள் மற்றும் தமிழ் திரையுலகத்தின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தனுஷ் நடிப்பில் தயாரான 'ராயன்' திரைப்படம் - ஜூன் மாதம் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறது.

இயக்குநர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ராயன்' எனும் திரைப்படத்தில் தனுஷ், எஸ். ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல்' ஏ. ஆர். ரஹ்மான்  இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் சிங்கிள் ட்ராக் எதிர்வரும் ஒன்பதாம் திகதியன்று வெளியிடப்படும் என படக் குழு அறிவித்துள்ளது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.  தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.‌

இதனிடையே 'ராயன்' திரைப்படம் - தனுஷின் திரையுலக பயணத்தில் அவர் நடிக்கும் 50 ஆவது திரைப்படம் என்பதும், ' ப. பாண்டி' படத்திற்குப் பிறகு அவர் இயக்கும் இரண்டாவது திரைப்படம் என்பதும், இந்த திரைப்படத்தில் தனுசுடன் அவரது சகோதரர் செல்வராகவனும் இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right