புரட்சிகரமான "சம்பத் PayBand" இனை அறிமுகப்படுத்துகிறது சம்பத் வங்கி

07 May, 2024 | 05:45 PM
image

உலகளாவிய ரீதியில் தொடுகையற்ற கொடுப்பனவு முறைகளுக்கான கேள்வி தொடர்ந்து அதிகரிக்கும் போக்கு நிலவி வரும் இக்காலகட்டத்தில், சம்பத் வங்கி தனது சமீபத்திய கண்டுபிடிப்பான அணியக்கூடிய, பல்துறை பயன்பாடுடைய சம்பத்  PayBandஇனை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது.

இந்த புதிய கொடுப்பனவு முறையானது இலங்கையில் பரிவர்த்தனை செயற்பாடுகளில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தி இளைய தலைமுறையினர் மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் நாட்டம் கொண்ட நுகர்வோரின் அதிகரிக்கும் கேள்விகளைப் பூரித்தி செய்வதை உறுதி செய்கிறது.

மேலும் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இவ்வகையான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதன் மூலமாக, சம்பத் PayBand வசதியான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளின் புதிய சகாப்தத்தின் ஆரம்பமாக அமைகிறது. 

உலகம் முழுவதும் இலத்திரனியல் பணப் பரிமாற்றங்களை எளிதாக்கும் உலகளாவிய கட்டண அட்டை சேவை நிறுவனமான VISA உடன் இணைந்து ஆரம்பித்து அறிமுகப்படுத்தப்படும் சம்பத் PayBand மிகத்துல்லியமான முறையில் சிலிக்கான் இனால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளே கட்டண சிப் பொருத்தப்பட்ட ஒரு மணிக்கட்டுப்பட்டையாகும்.

சம்பத் வங்கி சேமிப்புக் கணக்குகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன சாதனம் மூலம் எந்தவொரு NFC-இயக்கப்பட்ட கட்டண முனையத்திலும் ஒரு இலேசான தட்டுதல் அல்லது இச்சாதனத்தினை அதன் அருகே கொண்டு செல்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் சிரமமின்றி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். சிரமமான பணப்பைகள், மறந்து விடப்பட்ட அட்டைகள் மற்றும் தவறவிடப்பட்ட தொலைபேசிகளின் நாட்களை இல்லாதொழித்து, சம்பத் PayBandஒவ்வொரு தருணத்திலும் தன்னிகரற்ற சேவையினை வழங்கும் என்பதில் ஐயமில்லை. 

சம்பத்  PayBand, உபயோகிப்பவர்களுக்கு எண்ணிறைந்த நன்மைகளை வழங்குகிறது. 

வசதியானது : இலேசாக தட்டுதல் அல்லது சாதனத்தின் அருகே கொண்டு செல்வதன் மூலம் தடையின்றி பணம் செலுத்துதல். 

புதுமையானது : பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அதி நவீன கொடுப்பனவுத்; தொழில்நுட்பத்தைத் தழுவுதல். 

துரிதமானது : பாரம்பரிய முறைகளைத் தகர்த்தெறிந்து விரைவான பரிவர்த்தனைகளில் ஈடுபடல். 

ஆக்கவளமுடையது : ஈடுபாடு மற்றும் செயற்திறனை அதிகரிக்க தொடுகையற்ற கொடுப்பனவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல். 

வாழ்க்கை முறையோடு : வாடிக்கையாளர்களின் விருப்புகளுக்கு இணைவான நவீன ஒன்றிணைந்தது தொழில்நுட்பங்களுடன் கூடிய கொடுப்பனவு முறையாதல். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனசக்தி பைனான்ஸ் மற்றும் டொயோட்டா லங்கா...

2026-01-21 11:36:49
news-image

இலங்கை போக்குவரத்து சபை (இபோச) பேருந்துகளுக்கான...

2026-01-21 10:54:10
news-image

S&P Sri Lanka சுட்டெண்ணில் இணையும்...

2026-01-20 11:37:47
news-image

புத்தம் புதிய பாலில் இருந்து ஆடம்பர...

2026-01-19 15:26:05
news-image

டிஜிட்டல் கொடுப்பனவுத்துறையை மேம்படுத்த டயலொக் மற்றும்...

2026-01-14 15:51:41
news-image

LOLC திவி சவிய இரண்டாம் கட்டம்...

2026-01-14 15:30:54
news-image

Healthguard Distribution நிறுவனத்தின் அனைத்து பிராந்திய...

2026-01-12 13:59:19
news-image

நிர்க்கதிக்கு ஆளான வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு...

2026-01-08 19:04:29
news-image

HelaGo அறிமுகம்: இலங்கையில் புதிய நியாயமான...

2026-01-07 15:57:51
news-image

2024 - 25க்கான Business Today’s...

2026-01-06 19:06:17
news-image

2025 "CMA விரிவாக்கப்பட்ட வருடாந்திர அறிக்கை...

2026-01-06 15:34:16
news-image

இலங்கை வங்கி - சர்வமத வழிபாடுகளுடன்...

2026-01-06 15:23:21