எம்மில் பலரும் வருமானத்தின் மீது எப்போதும் கவனத்துடன் இருப்பர். வருவாயை உயர்த்திக் கொள்வதற்கான வழிமுறைகளை அக்கறையுடன் அவதானித்து அதனை மேம்படுத்திக் கொள்வதில் தனி கவனம் செலுத்துவர்.
பொதுவாக எம்முடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு அடுத்துள்ள இரண்டாம் பாவகம் தான் வருவாயையும், தன வரவையும் குறிக்கிறது.
அதனால் உங்களுடைய லக்னம் எதுவோ. அதற்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டு அதிபதியை- கிரகத்தை இயக்குவதன் மூலம் வருமானத்தை தொடர்ச்சியாக பெறலாம்.
இரண்டாம் வீடு என்பது வருவாயை மட்டும் குறிப்பதில்லை. வாக்கு ஸ்தானத்தையும் குறிக்கிறது. இதனால் எம்முடைய முன்னோர்கள் உங்களது வருவாய் அதிகரித்து... அது உங்களிடம் தங்கி சேமிப்பாக தங்கி.. உயர்ந்து செல்வ நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் உங்களுடைய வாக்கு ஸ்தானத்தை நேர் நிலையான ஆற்றலுடன் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதை தவிர்த்து நீங்கள் உறவினர்களை புறம் பேசுவது. நண்பர்களை பற்றி அவதூறு கூறுவது.. எதிர்மறையான ஆற்றல் கொண்ட வார்த்தைகளை பேசுவது.. இதனை தொடர்ச்சியாக நீங்கள் மேற்கொண்டால் கிரக வலிமையின் காரணமாக உங்களிடம் வருவாய் வந்தாலும், அவை உங்களிடம் தங்காமல் செலவாவதுடன் கடனாளியாகவும் நீங்கள் நிற்க நேரிடும்.
உதாரணத்திற்கு எம்முடைய வீட்டில் உள்ள இல்லத்தரசிகளும் கூட இயலாமையில் காரணமாகவோ அல்லது கோபத்தின் வெளிப்பாடாகவோ எதிர்மறையான வார்த்தைகளை பேசக்கூடாது. உதாரணத்திற்கு சமையல் அறையில் கோதுமை இல்லை என்றால்.. குடும்பத் தலைவரிடம், 'வெளியிலிருந்து வரும் போது கோதுமையை வாங்கி வாருங்கள்', 'கோதுமை வேண்டும்' என உச்சரிக்க வேண்டும். இதைத் தவிர்த்து 'சமைப்பதற்கு கோதுமை இல்லை' என சொன்னால்.. உங்களுக்கு விரைவில் கோதுமை கிடைக்காமல் போகக்கூடும். இதனால் வாக்கு ஸ்தானத்தை நேர் நிலையான ஆற்றலுடன் தொடர்ச்சியாக பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். இதில் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.. தனவந்தர்கள் எப்போதும் இந்த விடயத்தில் நேர் நிலையான ஆற்றல் கொண்ட வார்த்தைகளை மட்டுமே பேசி தங்களது வருவாயை அதிகரித்துக் கொள்வதை அனுபவத்தில் காணலாம்.
உங்களிடம் உள்ள ஆடைகளை துவைத்து இஸ்திரி போட்டு நேர்த்தியாக உடுத்துங்கள். வாய்ப்பு கிடைத்தால் குறைவான கட்டணத்தில் கிடைக்கும் ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்களை உங்கள் ஆடை மீது பூசி கொள்ளுங்கள். இதனால் சுக்கிரனுடைய பாவகம் இயங்கத் தொடங்கி உங்களுக்கான வருவாய் தடையின்றி வரத் தொடங்கும்.
உங்களது கைகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மணி தியாலத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மணி தியாலத்திற்கு ஒரு முறையோ உங்களது கைகளை தண்ணீரால் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தால்.. வருமானம் அதிகரிக்கும்.
உங்களது வருமானத்தில் திடீரென்று தடை ஏற்பட்டால்.. சற்றும் யோசிக்காமல் நீங்கள் அணிந்திருக்கும் காலணியை மாற்றி விடுங்கள். புதிய காலனியை வாங்கி அணிந்து கொள்ளுங்கள். இதுவும் செல்வ வளத்தை சூட்சமமாக அதிகரிக்க உதவும் எளிய பரிகாரம். காலணி என்பது சனியை குறிக்கும் என்பதாலும் சனி பகவான் தொழில் காரகன் என்பதாலும் காலணியை மாற்றினால் மாற்றம் ஏற்படும்.
மேலும் இரண்டாமிடம் என்பது வாய்ப்பகுதியையும் குறிப்பிடுவதால்.. உணவை குறைவாக சாப்பிட வேண்டாம். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் அபிஜித் நட்சத்திர வேளை என குறிப்பிடப்படும் 12 3/4 மணி முதல் 1 1/4 வரையிலான நேரத்தில் மசாலா பொருட்களால் தயாரிக்கப்பட்ட சைவ/ அசைவ பிரியாணியை வாயார.. வயிறார .. சாப்பிட்டாலும் சுக்கிரன் இயங்கத் தொடங்கி வருமானம் அதிகரிக்கும்.
அதே தருணத்தில் காலை எழுந்தவுடன் காலை கடனை கழிப்பதற்காக கழிப்பறைக்கு செல்வது இயல்பு. இங்கு இயல்பான - அளவான தருணத்தை விட- கூடுதலான நேரத்தை செலவழித்தால் அதுவே பொருளாதார தடையை ஏற்படுத்தும். எனவே கழிப்பறையை கூட குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எம்மில் சிலர் காலைக்கடன் கழிப்பதற்காக கழிவறைக்குச் சென்றால் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை எடுத்துக் கொள்வர். இது மறைமுகமாக உங்களது வருமானத்தில் தடையை ஏற்படுத்திவிடும். ஏனெனில் கழிவறை என்பது எட்டாம் பாவகத்தை குறிக்கும் இடம். இதனை குறைவாகத்தான் இயக்க வேண்டும் இயல்பான அளவைவிட கூடுதலாக இயக்கினால் எட்டாம் பாவகம் இயங்கி, பொருளாதாரத்தில் தடையை ஏற்படுத்தும்.
மேற்கூறிய எளிய வாழ்வியல் பரிகாரங்களை மேற்கொண்டு, வருவாயை உயர்த்திக் கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM