நடிகை அனுபமா பரமேஸ்வரன் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'லாக் டவுன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஏ. ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாக் டவுன்' எனும் திரைப்படத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகையான அனுபமா பரமேஸ்வரன் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் நடிக்கும் நடிகர் நடிகைகளின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. கே. ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு என் . ஆர். ரகுநந்தன் மற்றும் சித்தார்த்த விபின் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகியான அனுபமா பரமேஸ்வரன், 'லாக் டவுன்' காலகட்டத்தில் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்த உணர்வு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது.
இதனிடையே நடிகை அனுபமா பரமேஸ்வரன், 'பிரேமம்' எனும் மலையாள படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் என்பதும், தமிழில் தனுசுடன் 'கொடி' எனும் திரைப்படத்திலும், அதர்வாவுடன் 'தள்ளி போகாதே' எனும் திரைப்படத்திலும், ஜெயம் ரவியுடன் 'சைரன்' எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் என்பதும், தற்போது துருவ் விக்ரம் ஜோடியாக 'பைசன் காள மாடன்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM