யாழ். வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து கும்பல் ஒன்று அடாவடி

Published By: Digital Desk 3

07 May, 2024 | 12:57 PM
image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இளைஞனின் உயிரிழப்பை அடுத்து , அவரின் நண்பர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன், மருத்துவர்கள், தாதியர்கள், நோயாளிகளுடன் முரண்பட்டனர். 

அது தொடர்பில் மருத்துவ சேவைக்கு இடையூறு ஏற்படுத்தினார் என வைத்தியசாலை நிர்வாகத்தினரால், யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அடாவடியில் ஈடுபட்டவர்களை இனம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறை மோதலுக்கு எதிர்க்கட்சிகளை குறை கூறுவது...

2026-08-09 15:25:39
news-image

ஜே.ஆரின் அரசியலமைப்புக்கு அரசாங்கம் மேலும் வலு...

2026-08-09 14:48:04
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு நீதிமன்ற...

2026-08-09 16:37:53
news-image

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்கள் : மனித...

2026-08-09 16:46:48
news-image

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு ஜனநாயகத்திற்கு...

2026-08-09 17:28:02
news-image

நாமல் ராஜபக்‌ஷக்கு சிறைச்சாலைகளில் அதிக வாக்குகள்:...

2026-08-09 17:51:42
news-image

தென் கொரியாவில் மத சுதந்திரம், கருத்துச்...

2026-08-09 22:16:45
news-image

அரசியலமைப்பு திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது...

2026-08-09 17:53:18
news-image

மாகாண சபை தேர்தல் தாமதத்திற்கு எல்லை...

2026-08-09 17:56:52
news-image

எந்தவொரு வரைவு ஆவணமும் உருவாக்கப்படவில்லை: சிறிதரனுக்கு...

2026-08-09 17:53:01
news-image

நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல்...

2026-08-09 20:19:40
news-image

சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோதமாகப் பணியாற்றிய...

2026-08-09 18:04:26