குளியாபிட்டிய பிரதேசத்தில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு !

07 May, 2024 | 02:28 PM
image

குளியாபிட்டிய பிரதேசத்தில் காணாமல் போன இளைஞனின் சடலம் மாதம்பை , பனிரெண்டாவ பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியிலுள்ள வனப்பகுதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

காணாமல் போன இளைஞன் கொலை செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளதுடன் , இவர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார் . 

குறித்த இளைஞரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் நேற்று (06) குளியாப்பிட்டிய நீதிமன்றில் ஆஜராகிய பின் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் . 

வெலிமடை மற்றும் கெப்பெட்டிபொல பிரதேசத்தில் வசிக்கும் இருவர் இந்தக் கொலைக்கு  உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் . 

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி குளியாபிட்டிய, இலுகேன பிரதேசத்தில் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது . 

இந்த இளைஞனின் கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சுப்பணிகளுக்கு 600 -...

2024-07-14 13:03:24
news-image

ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பில்...

2024-07-14 11:57:50
news-image

தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மையினரின் ஆதரவு...

2024-07-14 11:59:28
news-image

ஜனாதிபதி வேட்பாளர்களோடு நிபந்தனைகளுடன் பேசுங்கள் -...

2024-07-14 12:24:26
news-image

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் பெண்...

2024-07-14 11:06:04
news-image

இலங்கை தொடர்பான பயண வழிகாட்டலைத் தளர்த்துமா...

2024-07-14 10:02:13
news-image

விளக்கேற்றி பூஜை செய்து புதையல் தோண்ட...

2024-07-14 10:39:29
news-image

காத்தான்குடி - புதுக்குடியிருப்பில் எரிபொருள் பவுசர்...

2024-07-14 10:06:21
news-image

பொருளாதார, பாதுகாப்பு துறைசார் ஒத்துழைப்பை கட்டியெழுப்புதல்...

2024-07-14 09:57:02
news-image

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி - இரண்டு...

2024-07-14 09:36:19
news-image

நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் 

2024-07-14 09:22:44
news-image

தமிழ்த் தேசியப் பேரவையின் உடன்பாடு 17இல்...

2024-07-14 09:29:39