ஐ.சி.சி. மகளிர் ரி-20 உலகக் கிண்ண தகுதிகாண் இறுதிப் போட்டியில் இலங்கை - ஸ்கொட்லாந்து

07 May, 2024 | 12:49 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷில் அக்டோபர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 10 அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஏ மற்றும் பி குழுக்களில் இணையப் போகும் தகுதிகாண் அணிகள் எவை என்பதைத் தீர்மானிக்கும் இலங்கைக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் இறுதிப் போட்டி அபுதாபியில் இன்று (07) இரவு நடைபெறவுள்ளது.

இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாகும் அணி, மகளிர் ரி20 உலகக் கிண்ண போட்டிக்கான ஏ குழுவிலும் தோல்வி அடையும் அணி பி குழுவிலும் இணைந்துகொள்ளும்.

மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழுவில் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் பி குழுவில் இங்கிலாந்து, வரவேற்பு நாடான பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன.

இவை இரண்டிலும் ஏ குழுவில் இடம்பெறும் அணிகள் பலம் வாய்ந்ததாக இருப்பதால் இலங்கையும் ஸ்கொட்லாந்தும் இந்தக் குழுவில் இணைவதைப் பெரிதும் விரும்பாது.

ஆனால், தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாக வேண்டும் என்பதில் இரண்டு அணிகளும் உறுதியாக இருக்கின்றன.

அபுதாயில் நடைபெற்றுவந்த ஐசிசி  மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண்  சுற்றில் ஏ குழுவில் இடம்பெற்ற இலங்கை தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

லீக் சுற்றில் தாய்லாந்து, ஸ்கொட்லாந்து, உகண்டா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளை வெற்றிகொண்டதுடன் அரை இறுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தி இன்றைய இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இப் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் இலங்கை பெரிய அளவில் பிரகாசிக்காத போதிலும் கட்டுப்பாடான பந்துவீச்சுகளே அதன் வெற்றிகளில் முக்கிய பங்காற்றின.

மறுபக்கத்தில் இலங்கையிடம் மாத்திரம் லீக் சுற்றில் தோல்வி அடைந்த ஸ்கொட்லாந்து மற்றைய 3 போட்டிகளில் உகண்டா, ஐக்கிய அமெரிக்கா, தாய்லாந்து ஆகிய அணிகளை இலகுவாக வெற்றிகொண்டது.

தொடர்ந்து முதலாவது அரை இறுதிப் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இலங்கை மகளிர் அணியில் விஷ்மி குணரட்ன (5 போட்டிகளில் ஒரு அரைச் சதம் உட்பட 180 ஓட்டங்கள்), அணித் தலைவி சமரி அத்தப்பத்து (5 போட்டிகளில் ஒரு அரைச் சதம் உட்பட 124 ஓட்டங்கள்) ஆகிய இருவரே துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டுள்ளனர்.

பந்துவீச்சில் இனோஷி ப்ரபோதனி, சமரி அத்தபத்து, கவிஷா டில்ஹாரி ஆகிய மூவரும் தலா 7 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

ஸ்கொட்லாந்து துடுப்பாட்டத்தில் அணித் தலைவி கெத்ரின் ப்றைஸ் (5 போட்டிகளில் 2 அரைச் சதங்களுடன் 177 ஓட்டங்கள்), அலிசா லிஸ்டர் (5 போட்டிகளில் ஒரு அரைச் சதத்துடன் 102 ஓட்டங்கள்), சஸ்கயா ஹோலி (5 போட்டிகளில் ஒரு அரைச் சதத்துடன் 94 ஓட்டங்கள்) ஆகிய மூவரும் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

பந்துவீச்சில் கெத்ரின் ப்றைஸ், ரஷேல்  எலிஸபெத் ஸ்லேட்டர் ஆகிய இருவரும் தலா 9 விக்கெட்களையும் அப்தஹா மஹின் மக்சூத் 8 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

LPLஇல் நான்காவது தடவையாக முடிசூடா மன்னனானது...

2024-07-22 00:12:05
news-image

ஜெவ்னா கிங்ஸ் நான்காவது தடவையாக சம்பியனானது

2024-07-22 01:29:19
news-image

வடக்கும் தெற்கும் மோதும் லங்கா பிறீமியர்...

2024-07-21 15:57:37
news-image

இந்தியாவுக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடர்;...

2024-07-21 11:48:02
news-image

கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய 2ஆவது தகுதிகாணில்...

2024-07-20 23:50:06
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ணத்தில் விஷ்மி...

2024-07-20 22:36:30
news-image

20 வயதின் கீழ் மகளிர் மத்திய...

2024-07-20 11:44:10
news-image

இலங்கையுடனான 2ஆவது இளையோர் டெஸ்டில் இன்னிங்ஸால்...

2024-07-20 10:59:00
news-image

யாழ். மெய்வல்லுநர்கள் இருவர் உட்பட 10...

2024-07-20 01:04:53
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-07-19 20:45:59
news-image

அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ...

2024-07-19 16:06:50
news-image

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு...

2024-07-19 14:47:26