தலவாக்கலையில் நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து போதைப் பொருள் மீட்பு

Published By: Digital Desk 3

07 May, 2024 | 09:43 AM
image

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரிலுள்ள தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம்  ஒன்றிலிருந்து கஞ்சா பொதிகள் கைபற்றப்பட்டுள்ளன. 

பிரதேச மக்களால் தலவாக்கலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து ஸ்தலத்திற்கு சென்றபோது  கஞ்சா பொதிகளுடன் நிறுவனத்தில் பணியாற்றிய இருவர் சனிக்கிழமை  கைது செய்யப்பட்டனர். 

மாதாந்த கொடுப்பனவை செலுத்த தவறிய முச்சக்கர வண்டி ஒன்றை அபகரித்து கொண்டு வந்த போது அந்த வாகனத்தில் குறித்த பொதிகள் இருந்ததாகவும், தமக்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அதனைத் தொடர்ந்து நேற்று சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது இருவரையும் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04
news-image

4 உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக ரூபா...

2025-03-26 17:35:26
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கோடாவுடன்...

2025-03-26 17:28:12
news-image

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...

2025-03-26 17:15:00
news-image

அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதில்...

2025-03-26 17:25:49
news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23