இந்திய பெண் விஞ்ஞானிகளின் குறிப்பிடத்தக்க சாதனைகள் இருக்கின்ற போதிலும் அவர்களின் பங்களிப்புகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.
2014 ஆம் ஆண்டில், ஒரே பயணத்தில் செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் நாடு என்ற வரலாற்று மைல் கல்லை இந்தியா எட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.
இருப்பினும், இந்த பணியில் எட்டு பெண் விஞ்ஞானிகள் ஆற்றிய முக்கிய பங்கு பின்னரேயே அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
மேரி கியூரி போன்றவர்கள் விஞ்ஞான உலகில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டாலும், இந்தியப் பெண் விஞ்ஞானிகள் பெரிதாக கொண்டாடப்படுவதில்லை.
இங்கு, ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறைக்கு சவால் விடுத்து குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்திய பத்து விதிவிலக்கான இந்திய பெண் விஞ்ஞானிகள் குறித்து நாம் அறிந்துகொள்வோம்:
1. ககன்தீப் காங்: புகழ்பெற்ற நுண்ணுயிரியல் நிபுணர், குழந்தை வைரஸ் நோய்களுக்கான தனது பணிக்காக பிரபமானவர்.
2. டெஸ்ஸி தோமஸ்: இந்தியாவின் அணுசக்தி ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தில் முன்னணி நபர், அவருக்கு "இந்தியாவின் ஏவுகணைப் பெண்" என்ற பட்டம் வழங்கப்படட்து
3. நிகர் ஷாஜி: குறிப்பாக ஆதித்யா-எல்1 சோலார் மிஷன் மேற்பார்வை உட்பட இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கு முக்கிய பங்காற்றுபவர்,.
4. சுதா பட்டாச்சார்யா: என்டமீபா ஹிஸ்டோலிடிகா பற்றிய அற்புதமான ஆய்வுகளுடன் குறிப்பிடத்தக்க மூலக்கூறு ஒட்டுண்ணியியல் நிபுணர்.
5. கல்பனா சாவ்லா: முன்னோடி விண்வெளி வீராங்கனை மற்றும் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய வம்சாவளி பெண்.
6. விஜயலக்ஷ்மி ரவீந்திரநாத்: புகழ்பெற்ற நரம்பியல் விஞ்ஞானி மற்றும் தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர்.
7. சுபா டோலே: மதிப்பிற்குரிய நரம்பியல் விஞ்ஞானி மூளை வளர்ச்சிக்கான தனது பணிக்காக அங்கீகரிக்கப்பட்டார்.
8. மினல் சம்பத்: இந்தியாவின் செவ்வாய்ப் பயணத்தில் பங்களித்த கணிப்பொறி பொறியியலாளர்
9. ரோகினி காட்போல்: அடிப்படைத் துகள் இயற்பியலுக்கான அவரது பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட புகழ்பெற்ற தத்துவார்த்த இயற்பியலாளர்.
10. சுனேத்ரா குப்தா: சிறந்த நாவலாசிரியர், கட்டுரையாளர் மற்றும் விஞ்ஞானி. தொற்றுநோயியல் துறையில் அவரது பணிக்காக கௌரவிக்கப்பட்டார்.
பெண் விஞ்ஞானிகளின் கருதுகோள்கள் மற்றும் பங்களிப்புகள் புதுமை மற்றும் முன்னேற்றத்தை உந்துவதற்கு முக்கியமானவை. அவர்களின் பரந்தளவிலான அனுபவங்களும் பின்னணிகளும் தனித்துவமான அறிவை நோக்கிச்செல்கின்றன, இதன் விளைவாக அற்புதமான கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்கள், இறுதியில் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM