அமெரிக்க தூதுவரை சந்தித்தனர் ரி-20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் இலங்கை வீரர்கள்

06 May, 2024 | 08:48 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்காக ஐக்கிய அமெரிக்கா பயணிப்பதற்கு முன்னர் இலங்கை அணியினரை அமெரிக்க தூதரகம் உபசரித்துள்ளது.

'எக்ஸ்'இல் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், 'ஐக்கிய அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகும்  இலங்கையின் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியினரை அமெரிக்க தூதரகத்தில் நாங்கள் வரவேற்றோம். ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களுக்கு இந்த அணி செல்வது விளையாட்டுத்துறை இராஜதந்திரத்திற்கு முக்கியமான சந்தர்ப்பமாக அமைகிறது. அவர்கள் தங்கள் ஆற்றல்கள் மற்றும் ஆர்வத்தின் மூலம் ஐக்கிய அமெரிக்கா முழுவதும் உள்ள இரசிகர்களை ஈர்ப்பார்கள் என்பது உறுதி' என குறிப்பிட்டுள்ளார்.

வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலன்க, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, குசல் பெரேரா, பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, பெத்தும் நிஸ்ஸங்க, மதீஷ பத்திரண, சதீர சமரவிக்ரம, பிரமோத் மதுஷான், துனித் வெல்லாலகே, அகில தனஞ்சய, பானுக ராஜபக்ச, ஜெவ்ரி வெண்டர்சே, நுவன் துஷார, சாமிக்க கருணாரத்ன, து ன்மந்த சமீர, நிரோஷன் டிக்வெல்ல, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோரை அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் சந்தித்து உரையாடினார்.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை கூட்டாக நடைபெறவுள்ளது.

அமெரிக்காவில் 3 மைதானங்களில் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ப்ளோரிடா, லவ்டர்ஹில் சென்ட்ரல் ப்ரோவார்ட் ரீஜினல் பார்க் விளையாட்டரங்கு, டெக்சாஸ் க்ராண்ட் ப்ரெய்ரி விளையாட்டரங்கு, நியூ யோர்க, ஈஸ்ட் மெடா நசவ் கன்ட்றி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய 3 விளையாட்டரங்குகளே ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள அமெரிக்க மைதானங்களாகும்.

ரி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. பெரும்பாலும் இந்த வாரத்திற்குள் 15 வீரர்களைக் கொண்ட இறுதிக் குழாத்தை உப்புல் தரங்க தலைமையிலான இலங்கை அணித் தெரிவுக் குழுவினர் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாருஜன் பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் இரட்டைச் சதமடித்து...

2025-03-26 14:39:40
news-image

வரலாற்று சாதனை படைத்தது பஞ்சாப் கிங்ஸ்! 

2025-03-26 17:00:16
news-image

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட...

2025-03-25 15:08:56
news-image

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு...

2025-03-24 15:37:18
news-image

பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி...

2025-03-24 02:56:34
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான்...

2025-03-23 21:38:21
news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08