(நெவில் அன்தனி)
ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் இளம் வேகப்பந்துவீச்சு நட்சத்திரம் மதீஷ பத்திரண உபாதைக்குள்ளாகி இருப்பது இலங்கைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
இலங்கையின் ரி20 உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் மதீஷ பத்திரண, இநதியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
சென்னை சார்பாக இவ்வருடம் 6 போட்டிகளில் விளையாடிய மதீஷ பத்திரண, கடைசியாக கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தார்.
அதன் பின்னர் சென்னையில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்து தரம்சாலாவில் மீண்டும் நடைபெற்ற அதே அணிக்கு எதிரான போட்டியிலும் உபாதை காரணமாக மதீஷ பத்திரண விளையாடவில்லை.
அவர் உபாதைக்குள்ளானது சென்னை சுப்பர் கிங்ஸுக்கு ஏற்படுத்திய பாதிப்பு ஒரு புறம் இருக்க இலங்கைக்கு அதனை விட பெரிய சிக்கலை தோற்றுவித்துள்ளது.
இன்னும் சில தினங்களில் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு மூன்று வாரங்கள் இருப்பதால் மதீஷ பத்திரண அதற்குள் பூரண குணமடைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக 6 போட்டிகளில் மாத்திரம் விளையாடிய 'டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்' மதீஷ பத்திரண 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரது எக்கொனொமி ரேட் 7.68 ஆக இருக்கிறது.
பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சர்வதேச ரி20 போட்டியில் உபாதைக்குள்ளான மதீஷ பத்திரண அதன் பின்னர் சிகிச்சையுடன் ஓய்வுபெற்றுவந்தார்.
இதன் காரணமாக சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் நடைபெற்ற ஐபிஎல் ஆரம்பப் போட்டியில் பத்திரண விளையாடவில்லை.
பத்திரணவுக்கு முன்பதாக முதலாவதாக உபாதைக்குள்ளானவர் டில்ஷான் மதுஷன்க ஆவார். இதன் காரணமாக ஐபிஎல் இல் மும்பைக்காக விளையாடவிருந்த அவரது வாய்ப்பு அற்றுப்போனது.
இலங்கையின் ரி20 அணித் தலைவரும் முன்னணி சுழல்பந்துவீச்சாளருமான வனிந்து ஹசரங்கவும் தனது இடது குதிக்காலில் ஏற்பட்ட உபாதையினால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்க்க நெரிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM