இன்றைய சூழலில் எம்மில் பலரும் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள். நெருங்கிய உறவுகளையும், அறிமுகமான நல்ல மனம் படைத்தவர்களையும் தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இது தவறு..!
என ஆன்மீக முன்னோர்கள் சுட்டிக்காட்டினாலும் எம்முடைய மக்கள் இது வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தி என சொல்லிக்கொண்டு, தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். இப்படி கிடைக்கும் வெற்றி தற்காலிகமானது என்பதையும், மேலும் இது நாளடைவில் எம்முடைய குடும்ப உறுப்பினர்களை பாதிக்கும் என்பதையும் உணர்வதில்லை.
உடனே எம்மில் சிலர் நிறைய விடயங்கள் நடைபெற வேண்டும் என மனதில் பிரார்த்தித்துக் கொள்கிறோம். ஆனால் அந்தப் பிரார்த்தனை எதுவும் நிறைவேறுவதில்லை. இதனால் பிரார்த்தனை மீதே ஐயம் எழுகிறது? என்பர். ஆனால் இதற்கும் என்னுடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு அற்புதமான எளிய பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.
உங்களது வீட்டிற்கு அருகே இருக்கும் ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமானை பின்வருமாறு வழிபடத் தொடங்குங்கள் அல்லது உங்களது வீட்டிற்கு அருகே இருக்கும் அரச மரத்தடி விநாயகரை வணங்கத் தொடங்குங்கள். காலையில் எழுந்து நீராடி விநாயகர் ஆலயத்திற்கோ அல்லது விநாயகர் சன்னதிக்கோச் சென்று விநாயகருக்கு வெட்டிவேர் விளக்கினை ஏற்ற வேண்டும்.
வெட்டிவேர் என்பது எம்முடைய நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் ஒரு மூலிகை. இந்த மூலிகையை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதனை நீங்கள் விநாயகருக்காக ஏற்றும் விளக்கில் அது பசு நெய்யாக இருந்தாலும் பரவாயில்லை அல்லது நல்லெண்ணெய் தீபமாக இருந்தாலும் பரவாயில்லை.
அதில் இடப்படும் திரியில் சிறிதளவு வெட்டி வேரையும் கலந்து அதனை எரியச் செய்யுங்கள். இதன் போது விநாயகருக்கு அருகம்புல்லை சாற்றி இந்த வெட்டிவேர் விளக்கினை ஏற்றி உங்களது கோரிக்கையை அவர் முன் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பிரார்த்தனையை தொடர்ச்சியாக ஏழு நாட்கள் மேற்கொள்ள வேண்டும். எட்டாவது நாள் நீங்கள் நினைத்து கொண்டிருந்த காரியத்தில் முன்னேற்றம் ஏற்பட தொடங்கும். சிலருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரியும். வெகு சிலருக்கு எட்டாவது நாளிலேயே அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறி மனதில் விவரிக்க இயலாத மகிழ்ச்சி பொங்கும். இது சக்தி படைத்த எளிய பரிகாரம்.
இந்த எளிய பரிகாரத்தில் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் எம்முடைய முன்னோர்கள் விதித்திருக்கிறார்கள் நீங்கள் விநாயகப் பெருமானை தொழும் ஏழு நாட்களிலும் ஒரே ஒரு கோரிக்கையை தான் தொடர்ச்சியாக ஏழு நாட்களிலும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதன்போது உங்களுக்கு தெரிந்த விநாயகர் காயத்ரியை மனதில் உச்சரிக்க வேண்டும். இதை நீங்கள் ஏழு நாட்கள் செய்யும் போது உங்களுடைய எண்ணங்களில் படிந்து ஆக்கிரமித்திருக்கும் எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து, நேர் நிலையான எண்ணங்களும்... அது தொடர்பான பிரபஞ்ச ஆற்றல்களும்.. ஆரா மூலமாக அதிகரித்து, உங்களது நோக்கமும் ,எண்ணமும் செயல் வடிவம் பெறும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM