கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'கனா' தர்ஷன்!

06 May, 2024 | 06:49 PM
image

'கனா' படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமாகி, அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தர்ஷன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு மாஸ்டர்தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் தர்ஷன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அர்ஷா சாந்தினி பைஜு நடிக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், தீனா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, ப்ளேஸ்மித் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்படிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது என்றும், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும், படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வரும் தர்ஷன் இப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக உயர்ந்து, தமிழ் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்தை எட்டிப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்