'அட்டு' எனும் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் ரிஷி ரித்விக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'குற்றம் தவிர்' என பெயரிடப்பட்டு, அப்படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருப்பதுடன் படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் வரும் 'குற்றம் தவிர்' எனும் திரைப்படத்தில் ரிஷி ரித்விக், ஆராத்யா, 'பருத்திவீரன்' சரவணன், சென்ராயன், வினோதினி, அஸ்மிதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பி. கே. ஹெச். தாஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. பாண்டுரங்கன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் சிறப்பு அதிதியாக பங்குபற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இன்றைய சூழலில் சமூகத்தில் புதிது புதிதாக குற்றங்கள் நடைபெறுகின்றன. அப்படி ஒரு குற்றத்தை கதாநாயகன் கண்டுபிடிக்கிறார். அத்துடன் அதனை தடுக்கவும் திட்டமிடுகிறார். இதன் போது அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களும், சவால்களும் தான் இப்படத்தின் திரைக்கதை.
இந்த கதையில் இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் ஒன்று விரிவாக பேசப்பட்டிருக்கிறது. இப்படம் வெளியானவுடன் பெரிய அதிர்வை ஏற்படுத்தும். இந்தத் திரைப்படத்தை தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாக்குவதால் சென்னை மற்றும் பெங்களூரூ என இரண்டு நிலவியல் பின்னணியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM