அரசியல் நையாண்டி பாணியில் உருவானாலும், 'உயிர் தமிழுக்கு' திரைப்படம் முழுக்க முழுக்க காதல் திரைப்படம். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு டஃப் கொடுத்திருக்கிறார் அமீர்'' என 'உயிர் தமிழுக்கு' படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆதம் பாவா தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'உயிர் தமிழுக்கு' எனும் திரைப்படத்தில் இயக்குநரும், நடிகருமான அமீர், சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ஆனந்தராஜ், மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்பிரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவண சக்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வித்யாசாகர் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம் பாவா தயாரித்திருக்கிறார்.
மே பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது இயக்குநர்கள் கரு. பழனியப்பன், எஸ். ஆர். பிரபாகரன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் ஆதம் பாவா பேசுகையில், '' என்னை இயக்குநராக்கியது அமீர் அண்ணன் தான். இந்தத் திரைப்படம் நேர்த்தியாக உருவாகியிருப்பதற்கு மக்கள் போராளி அமீர் தான் காரணம். மக்களுக்கான எல்லா போராட்டங்களிலும் எப்போதும் முன் களத்தில் நிற்கும் அமீருக்கு இந்த மக்கள் போராளி பட்டம் கொடுக்கவில்லை என்றால் வேறு யாருக்கு கொடுப்பது..? இந்த திரைப்படம் அரசியல் நையாண்டி பின்னணியில் உருவாகி இருந்தாலும் முழுக்க முழுக்க காதலை சொல்லும் காதல் கதை தான். இந்த திரைப்படத்தில் அமீர் அண்ணன் சிவகார்த்திகேயனுக்கு டஃப் கொடுத்திருக்கிறார். அமீர் அண்ணன் மீது சமீபத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டு, தற்போது வெளியீட்டிற்கு தயாராகி மே 10 ஆம் தேதி வெளியாகிறது. 'உயிர் தமிழுக்கு' ஜாலியான திரைப்படம். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான அமீர் பேசுகையில், '' வாழ்க்கையில் இதுவரை சந்தித்திராத புதிய சூழல் இது. இந்த சூழலில் நான் யார் என யோசித்தால்...? ராமாயணத்தில் வரும் சீதையும், நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல் தான். அவர் அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒருமுறை தான் நிரூபித்தார். நான் வாராவாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்று அவநம்பிக்கையுடன் நினைக்காமல், எனக்கு ஏன் இது நடந்தது? என்று இறை நம்பிக்கையுடன் யோசிக்க கூடியவன் நான். இந்த இடத்திலிருந்து இன்னும் என்னை சரி செய்து கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்கிறேன். அதனால் அதை நோக்கித்தான் நான் பயணிக்கிறேன்.
இந்தத் திரைப்படம் ஜாலியாக ரசிகர்களை சிரிக்க வைக்கும் திரைப்படம். சிக்கலான தருணத்தில் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தயாரிப்பாளர் ஆதம் பாவாவிற்கு நன்றி.'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM