மகளிர் ரி - 20 உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றது ஸ்கொட்லாந்து

05 May, 2024 | 08:45 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷில் இந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி ரி20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற ஸ்கொட்லாந்து தகுதிபெற்றுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி ஸய்யத் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் முதலாவது அரை இறுதியப் போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கிண்ண தகுதியை ஸ்கொட்லாந்து பெற்றுக்கொண்டது.

அணித் தலைவி கெத்ரின் ப்றைஸின் சகலதுறை ஆட்டம், மெகான் மெக்கோலின் சிறந்த துடுப்பாட்டம் என்பன அயர்லாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

அயர்லாந்துக்கு எதிரான முதலாவது அரை இறுதியில் 111 ஓட்டங்களை வெற்றி இலகக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 16.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் மெகான் மெக்கோல் 50 ஓட்டங்களையும் கெத்ரின் ப்றைஸ் ஆட்டம் இழக்காமல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆலின் கெலி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய  அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் லீ போல் 45 ஓட்டங்களையும் ஆலின் கெலி 35 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 60 ஓட்டங்களே அயார்லாந்து அணியைக் கௌரவமான நிலையில் இட்டது.

பந்துவீச்சில் கெத்ரின் ப்றைஸ் 4 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரஷேல் ஸ்லேட்டர் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: கெத்ரின் ப்றைஸ்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் இன்று இரவு நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட கடைசி அணியாகத் தகுதிபெறும்.  

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்ற அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஏ குழுவில் இடம்பெறுகின்றன. அந்த அணிகளுடன் தகுதகாண் சுற்றில் சம்பியனாகும் அணி இணையும்.

பி குழுவில் பங்களாதேஷ், இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன இடம்பெறுவதுடன் தகுதிகாண் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பெறும் அணி அக் குழுவில் இணைந்துகொள்ளும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் சிக்ஸுக்கு இலக்குவைத்துள்ள இலங்கை  ஏ...

2025-01-18 21:42:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட்...

2025-01-18 21:36:53
news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40