இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி  இன்று தர்மசாலாவில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 300 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 111 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்திய அணி சார்பில் இன்று தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய குல்டிப் சிங் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் 1-1 என இரு அணிகளும் சமனிலையில் உள்ளர்டன், தொடரை தீர்மானிக்கும் போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது.