அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த பெண் கிராம அதிகாரி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

05 May, 2024 | 10:19 AM
image

அரசாங்கத்தால்  வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர்  தாக்கப்பட்டு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான கிராம அதிகாரி பாணந்துறை  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

கிராம அதிகாரியைத் தாக்கிய நபருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி கிடைக்கப்பெறவில்லை எனவும் அதன் பின்னரே இருவருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கிராம அதிகாரியைத் தாக்கிய நபர் வஸ்கடுவ பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் இவர் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை  தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் பேருந்துடன்...

2026-09-12 17:15:07
news-image

மக்களின் பங்களிப்போடு புதிய அரசியலமைப்பு வேண்டும்...

2026-09-12 15:07:30
news-image

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக...

2026-09-12 16:17:37
news-image

கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ்...

2026-09-12 16:17:21
news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07
news-image

மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை:...

2026-09-12 15:45:08
news-image

தெஹிவளை கைகுண்டுத் தாக்குதல்: இலக்கு மாறியதால்...

2026-09-12 15:38:43
news-image

வீடு புகுந்து திருட்டு மற்றும் குற்றச்...

2026-09-12 15:16:55
news-image

26 நகரங்களை அபிவிருத்தி செய்ய 65...

2026-09-12 14:49:30
news-image

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு...

2026-09-12 15:13:56
news-image

தனமல்விலவில் 114 கிலோவிற்கும் அதிக கஞ்சாவுடன்...

2026-09-12 15:11:22