(நெவில் அன்தனி)
பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 52ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 4 விக்கெட்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இலகுவாக வெற்றிகொண்டது.
மொஹமத் சிராஜ், யாஷ் தயாள், விஜயகுமார் விஷாக் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் பவ் டு ப்ளெசிஸின் அதிரடியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றிக்கு வழிவகுத்தன.
இந்த வெற்றியுடன் 7ஆம் இடத்திற்கு றோயல் செலஞ்சர்ஸ் முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 13.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பவ் டு ப்ளெசிஸ், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 35 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து வலுவான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
முதலாவதாக ஆட்டம் இழந்த பவ் டு ப்ளெசிஸ் 23 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 64 ஓட்டங்களை விளாசினார்.
ஆனால், பவ் டு ப்ளெசிஸும் மேலும் 5 வீரர்களும் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
வில் ஜெக்ஸ் (1), ரஜாத் பட்டிடார் (2), க்ளென் மெக்ஸ்வெல் (4), கெமரன் க்றீன் (1) ஆகியோர் ஓற்றை இலக்கங்களுடன் ஆட்டம் இழக்க, மறுபக்கத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடிய விராத் கோஹ்லி 27 பந்துகளில் 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டகன்றார்.
எனினும் தினேஷ் கார்த்திக் (21 ஆ.இ.), ஸ்வப்னில் சிங் (15 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து றோயல் செலஞ்சர்ஸ் பெங்கறுர் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
பந்துவீச்சில் ஜொஷ் லிட்ல் 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நூர் அஹ்மத் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
முன்வரிசை வீரர்கள் மூவர் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டதும் 20ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளில் கடைசி 3 விக்கெட்களை இழந்ததும் குஜராத்தின் தோல்விக்கு முக்கிய காரணிகளாக இருந்தது.
ரிதிமான் சஹா (1), அணித் தலைவர் ஷுப்மான் கில் (2), சாய் சுதர்சன் (6) ஆகிய மூவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் களம் விட்டகன்றனர்.
எனினும் மத்திய வரிசை வீரர்கள் மூவர் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்று அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டனர்.
ஷாருக் கான் (24 பந்துகளில் 37), டேவிட் மில்லர் (20 பந்துகளில் 30), ராகுல் தெவாட்டியா (21 பந்துகளில் 35) ஆகிய மூவரே ஒரளவு சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.
அவர்களை விட ராஷித் கான் 18 ஓட்டங்களையும் விஜய் ஷன்கர் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் யாஷ் தயாள் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஜயகுமார் விஷாக் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: மொஹமத் சிராஜ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM