தயாரிப்பு : குன்றம் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : எம். எஸ். பாஸ்கர், விஸ்வாந்த், வெண்பா, நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம்குமார், பிரியதர்ஷினி, கார்த்திக் சந்திரசேகர் மற்றும் பலர்.
இயக்கம் : அருண் கே. பிரசாத்
மதிப்பீடு : 2/5
குணச்சித்திர நடிகராகவும், தனித்துவமான நகைச்சுவை நடிகராகவும் தமிழ் திரையுலகில் ஒளி வீசி வரும் நடிகர் எம். எஸ். பாஸ்கர் முதன்முறையாக கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அக்கரன்' எனும் திரைப்படம் - அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தாயை இழந்த இரண்டு வளர்ந்த பெண் பிள்ளைகளுக்கு தந்தையான எம் எஸ் பாஸ்கர்.. மூத்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வரன் தேடுகிறார். அவரது இளைய மகள் மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வருகிறார். இந்நிலையில் பயிற்சி மையத்திற்கு சென்ற இளைய மகள் வீடு திரும்பவில்லை. இதனால் காவல்துறையில் காணவில்லை என புகார் கொடுக்கிறார்.
இதனைத் தொடர்ந்து எம். எஸ். பாஸ்கர் இரண்டு நபர்களை கடத்தி வைத்து சித்திரவதை செய்து கேள்விகளை கேட்கிறார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு இருவரும் இரு வேறு கோணங்களில் பதிலளிக்கிறார்கள். இதில் எது உண்மை? எது பொய்? என்பதனை கண்டறிந்து யாரை தண்டிக்கிறார்?அந்த இருவரும் யார்? ஏன் அவர்களை கடத்துகிறார்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை அளிப்பது தான் படத்தின் கதை.
தொடக்கத்திலேயே இரண்டு நபரை கடத்தி, அவர்களை துன்புறுத்தி கேள்விகளை கேட்கத் தொடங்குகிறார். வயதான எம். எஸ். பாஸ்கர். அவர் கேட்கும் கேள்வி பார்வையாளர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. ஆனால் படத்தின் இரண்டாம் பகுதியில் ஃபிளாஷ்பேக் காட்சி நிறைவடைந்த பிறகு அவர் கேட்ட கேள்விக்கான அர்த்தம் பார்வையாளர்களுக்கு புரிகிறது. நான் லீனியர் பாணியில் திரைக்கதையை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளருக்கு பாராட்டுகளை தெரிவிக்கலாம். குறிப்பாக உச்சகட்ட காட்சியில் எம். எஸ். பாஸ்கரின் டிவிஸ்ட் இன்ட்ரஸ்டிங்.
'கபாலி' விஸ்வாந்த் குணச்சித்திர கதாபாத்திரத்தில், அறிமுகமாகி கதையின் நாயகனாக உயர்கிறார். அவருடைய நடிப்பில் அனுபவ தேர்ச்சி தெரிகிறது. இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை வெண்பா இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்கிறார்.
அரசியல்வாதி வேடத்தில் நடித்திருக்கும் நமோ நாராயணன் வழக்கம்போல் அசால்டாக அந்த கதாபாத்திரத்தில் பொருந்துகிறார்.
எம் எஸ் பாஸ்கர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி கதாபாத்திரமாகவே ஜொலிக்கிறார்.
வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கதையாக இருந்தாலும் இரண்டு வில்லன்களை வைத்துக்கொண்டு அவர்களின் கோணத்தில் கதையை வித்தியாசமாக நகர்த்திக் கொண்டு சென்ற இயக்குநரின் உத்தி ரசிக்க வைக்கிறது. உச்சகட்ட காட்சி எதிர்பாராத டிவிஸ்ட். இந்த டிவிஸ்ட் இதற்கு முன் தமிழ் படங்களில் வந்திருக்கிறது என்றாலும் மீண்டும் ஒரு முறை பார்ப்பதற்கு போரடிக்கவில்லை.
லாஜிக் மீறல்கள் ஏராளம். முதல் பகுதி திரைக்கதையில் பல இடங்களில் தொய்வு. இரண்டாம் பாதியில் எளிதாக யூகிக்கக்கூடிய காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் வழக்கமான படமாகவும் தெரிகிறது.
ஒளிப்பதிவு -பின்னணி இசை -கலை இயக்கம் -படத்தொகுப்பு- என தொழில் நுட்ப கலைஞர்கள் தங்களின் திறமையை முழுமையாக வழங்கி படத்தை ரசிக்க வைக்கிறார்கள்.
அக்கரன்- மனதில் நிறையாதவன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM