கர்ம வினைகள் மீதமிருக்கிறது என்பதை உணர்த்தும் லக்னமும், நட்சத்திரமும்..!

04 May, 2024 | 07:22 PM
image

எம்முடைய இல்லங்களில் வசிக்கும் உறுப்பினர்கள் முதுமையடைந்து மரணத்தை சந்தித்திருப்பார்கள். இவர்கள் மரணத்திற்கு பின் மோட்சத்தை அடைந்திருப்பார்கள் அல்லது மறுபிறவியை எடுத்திருப்பார்கள்.

ஆனால் இவர்களில் சிலர் மோட்சத்தையும் அடையாமல் மறுபிறவியையும் எடுக்காமல் அந்தரத்தில் இருப்பர். ஏனெனில் இவர்களுடைய கர்ம பலன்களில் குறைபாடு இருப்பதால் இவர்களால் பிரபஞ்சத்துடன் ஐக்கியமாக முடியாது. 

மறுபிறவியையும் எடுக்க இயலாது. இதுபோல் திரிசங்கு நிலையில் இருப்பவர்களை பூமியில் இருக்கும் நாம் ஆண்டுதோறும் வழிபாடு செய்து வணங்கிட வேண்டும் என எம்முடைய முன்னோர்கள் தெரிவிக்கிறார்கள்.

உடனே எம்மில் சிலர் எங்களுடைய பரம்பரையில் இது போல் திரிசங்கு நிலையில் உள்ள ஆத்மாவை எப்படி உணர்ந்து கொள்வது? என வினா எழுப்புவர்.

இதற்கும் மரபணு ஜோதிடர்கள் தெளிவாக விளக்கம் அளிக்கிறார்கள். உங்களது வீட்டில் அல்லது யாருடைய வீட்டில் பூச நட்சத்திரம்... விசாக நட்சத்திரம்... சதய நட்சத்திரம்..

ஆகிய  மூன்று நட்சத்திரங்களிலும், தனுசு லக்னத்திலும் பிறக்கிறார்களோ...! அவர்களுடைய பரம்பரையில் உள்ளவர்களில் சிலர் மறுபிறவியையும் எடுக்காமல், மோட்சத்தையும் அடைய வழி தெரியாமல், திரிசங்கு நிலையில் உள்ளனர் என்பதனை சூட்சமமாக அறியலாம்.

உங்களது குடும்பத்திலோ அல்லது உங்களுக்கு அறிமுகமான நபர்களின் குடும்பத்திலோ யாரேனும் இந்த நட்சத்திரத்திலும், இந்த லக்னத்திலும் பிறந்திருந்தால்... அவர்களுக்கு கர்ம வினைகள் மீதம் இருக்கிறது என பொருள். இதனை அனுபவம் வாய்ந்த மரபணு ஜோதிடர் மூலம் தெரிந்து கொண்டு அல்லது உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களுக்குரிய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இதனை செய்ய தவறும் போது உங்களுக்கான சுப பலன்கள் கிரக வலிமை இருந்தும் முழுமையாக கிடைக்காது. பரிகாரங்களை செய்தாலும் சுப பலன்கள் குறைவாகத்தான் கிடைக்கும். நீங்கள் இந்த கர்ம வினைகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு அதற்குரிய வழிபாட்டை பரிகாரமாக மேற்கொண்டால்தான் உங்களுக்கான ..இந்த பிறவியில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய சுப பலன்கள் கிடைக்கும் என்பது உறுதி.

இதுபோன்ற திரிசங்கு நிலையில் உள்ள ஆத்மாக்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அவர்களை பிரீத்தி செய்வதற்கான வழிபாட்டை உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.  இது நம்மை விட்டு நீங்கிய நம் முன்னோர்களை வழிபடும் ஒரு வழிபாட்டு முறை.

இதனையும் குலதெய்வ வழிபாட்டையும், அமாவாசை தோறும் வழங்கும் திதி பரிகாரத்தையும்... ஒன்றிணைத்து குழப்பிக் கொள்ளக் கூடாது. இவை அனைத்தும் தனித்துவமானவை என்பதில் தெளிவு வேண்டும்.

எனவே கர்ம வினைகளை குறைக்க எம்முடைய முன்னோர்களை வழிபடும் வழிபாட்டை கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மோட்சத்தை அடைவார்கள் அல்லது மறுபிறவி எடுப்பார்கள்.

தகவல் : விஷால் - தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-02-13 15:34:12
news-image

ஆரோக்கியம் மேம்படுவதற்கான சூட்சும வழிபாடு..!?

2025-02-12 17:06:58
news-image

தன வரவு தடையின்றி வருவதற்கான சூட்சம...

2025-02-11 16:22:28
news-image

கேள யோகம் உங்களுக்கு இருக்கிறதா..?

2025-02-10 16:04:07
news-image

திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு ஏலம் போன...

2025-02-09 15:30:14
news-image

காணி தோஷம் அகல பிரத்யேக வழிபாடு..!

2025-02-08 15:54:16
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப...

2025-02-08 11:08:44
news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36
news-image

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்...

2025-01-31 22:24:19