இந்திய மக்களவைத் தேர்தல் பார்வையாளர் திட்டம் : இலங்கை சார்பில் 10 பேர் பங்கேற்பு

04 May, 2024 | 08:03 PM
image

(நா.தனுஜா)

இந்தியாவில் நடைப்பெற்று வரும் மக்களவைத் தேர்தலை (பொதுத்தேர்தல்) பார்வையிடுவதற்கான' சர்வதேச தேர்தல் பார்வையாளர் திட்டம்' இந்திய தேர்தல் ஆணையகத்தின் ஏற்பாட்டில் இன்று  சனிக்கிழமை (04)  ஆரம்பமானது.

எதிர்வரும் 9 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தில் இலங்கை சார்பில் 10 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

இவர்களில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் இருவரும், தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் எண்மரும் உள்ளடங்குகின்றனர்.

சர்வதேச தேர்தல் பார்வையாளர் திட்டமானது சர்வதேச தேர்தல் முகாமை கட்டமைப்புக்களும்,தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய அமைப்புக்களும் உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பின்பற்றப்படும் தேர்தல் முறைமை பற்றி அறிந்துக் கொள்வதற்கும் தேர்தல் கட்டமைப்பு குறித்து கற்றறிவதற்கும் வாய்ப்பளிக்கிறது.இதேபோன்ற திட்டம் இந்திய தேர்தல்கள் ஆணையகத்தினால் கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற மக்களவைத் தேர்தலின் போதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இத்திட்டானது இந்திய தேர்தல்கள் தொடர்பான அறிமுகம் , இலத்திரனியல் வாக்குப்பதிவு,தகவல் தொழில்நுட்ப செயற்திட்டங்கள்,ஊடக மற்றும் சமூக வலைத்தளச் செயற்பாடுகள் உள்ளிட்ட பரந்துப்பட்ட விடயப்பரப்புக்களை உள்ளடக்கியுள்ளது. அதுமாத்திரமன்றி இத்திட்டத்தின் பங்கேற்பாளர்கள் குழுவாக இணைந்து வெவ்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்வதற்கும் அங்கு தேர்தல் செயன்முறையை பார்வையிடுவதற்குமான வாய்ப்பையும் இத்திட்டம் வழங்குகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடும் அனைவருக்கும்...

2025-04-19 18:16:28
news-image

நீதி நிலை நாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான...

2025-04-19 18:17:18
news-image

குறுகிய அரசியல் நோக்கங்களை தள்ளிவைத்து உண்மையைக்...

2025-04-19 18:17:02
news-image

இன்றைய வானிலை

2025-04-20 06:05:02
news-image

6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா...

2025-04-19 17:41:21
news-image

இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு...

2025-04-19 14:28:57
news-image

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு, கிழக்கு...

2025-04-19 13:11:09
news-image

பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம்...

2025-04-19 17:45:39
news-image

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12...

2025-04-19 17:53:34
news-image

வன்னி காணி விடயங்கள், அபிவிருத்தி விடயங்கள்...

2025-04-19 17:42:39
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-04-19 17:34:39
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்காது...

2025-04-19 17:50:52