'ஜோ' எனும் வெற்றிப் பெற்றப் படத்திற்குப் பிறகு அப்படத்தின் நாயகனான நடிகர் ரியோ ராஜ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மனோஜ் நடிக்கிறார். 'ஜோ' படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைந்திருக்கிறது.
இவர்களுடன் ஆர். ஜே. விக்னேஷ் காந்த், ஷீலா ராஜ்குமார், இயக்குநரும், நடிகருமான ஏ. வெங்கடேஷ், கஜராஜ், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சித்துகுமார் இசையமைக்கிறார். ஃபேமிலி டிராமா ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மணிகண்டன் கந்தசுவாமி இப்படத்தை தயாரிக்கிறார். பிளாக் ஷீப் நிறுவனம் இணை தயாரிப்பு பொறுப்பினை ஏற்றிருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' திருமணமான ஆண்கள் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பிரச்சனைகளை பேசி, பெண்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM