இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட 'போகுமிடம் வெகுதூரமில்லை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

04 May, 2024 | 08:37 PM
image

நடிகர்கள் விமல்- கருணாஸ் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'போகுமிடம் வெகுதூரமில்லை' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் மைக்கேல் கே. ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போகுமிடம் வெகுதூரமில்லை' எனும் திரைப்படத்தில் விமல், கருணாஸ் நடித்திருக்கிறார்கள்.

டிமெல் எக்ஸ் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.  இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச் செல்லும் அமரர் ஊர்தி எனும் வாகனத்தை இயக்கும் சாரதிகளின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஷார்க் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிவ கிலாரி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கருணாஸின் முதுமை தோற்றமும், அமரர் ஊர்தியினை இயக்கும் சாரதியாக விமலின் தோற்றமும் வித்தியாசமான பின்னணியில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right