சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 : இந்தியாவின் சகல போட்டிகளும் லாகூரில் நகல் அட்டவணை பாகிஸ்தான் வெளியீடு!

04 May, 2024 | 08:38 PM
image

(நெவில் அன்தனி)

அடுத்த வருடம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டுக்கான இந்தியாவின் சகல போட்டிகளையும் லாகூரில் நடத்தும் வகையில் நகல் அட்டவணை ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தயாரித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதைத் தவிர்த்துவரும் இந்தியாவை 17 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக வரவேற்கும் முயற்சியாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதன் போட்டிகள் அனைத்தையும் லாகூரில் நடத்தும் வகையில் அட்டவணைப் படுத்தியுள்ளது.

இறுதிப் போட்டியும் லாகூரிலேய நடைபெறவுள்ளது.

இந்தியாவின் போட்டிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் நடத்துவதன் மூலம் உயிர்பாதுகாப்பு, பாதுகாப்பு (safety and security) உட்பட பல்வேறு விடயங்களை சிறப்பாக பேண முடியும் என்பது பாகிஸ்தானின் நம்பிக்கையாகும்.

மேலும் இந்தியாவு க்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான  வகா  எல்லை லாகூரை அண்மித்திருப்பதால் இந்திய இரசிகர்களுக்கு போட்டிகளை நேரடியாகக் கண்டுகளிப்பதற்கு பயணம் செய்ய இலகுவாக இருக்கும் என பாகிஸ்தான் கருதுகிறது.

லாகூரைவிட கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களிலும் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளது.

இரண்டு வாரங்களில் நிறைவுபெறும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டுக்கான நகல் போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ஐசிசி) அனுப்பிவைத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் மோஷின் நக்வி தெரிவித்தார்.

2008 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் இதுவரை இந்திய கிரிக்கெட் அணி எதுவும் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ததில்லை.

மும்பையில் அந்த வருடம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக இரண்டு நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இடையில் இருந்துவந்த உறவுகளில் பிளவுகள் அதிகரிக்க ஆரம்பித்தது.

அதற்கு முன்னர் நான்கு இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் இரண்டு நாடுகளும் விளையாடியிருந்தன.

கடந்த வருடம் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் முன்னின்று நடத்தியது. இந்தியாவை பங்குபற்றச் செய்வதற்காக 2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடத்தப்பட்டது. இந்தியாவின் சகல போட்டிகளும் இலங்கையில் நடைபெற்றதுடன் இறுதிப் போட்டி கொழும்பில் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இரண்டு நாடுகளில் நடத்துமாறு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்த போதிலும் ஐசிசியோ இந்தியாவோ அதற்கு உடன்படவில்லை. இறுதியில் இந்தியாவிலேயே பாகிஸ்தான் தனது சகல உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியது.

எவ்வாறாயினும் சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு இந்திய கிரிக்கெட் சபையை விட இந்திய அரசின் கைகளிலேயே தங்கியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துடுப்பாட்டத்தில் சனெத்மா, பந்துவீச்சில் ப்ரபோதா அற்புதம்;...

2025-01-19 12:39:42
news-image

சுப்பர் சிக்ஸுக்கு இலக்குவைத்துள்ள இலங்கை  ஏ...

2025-01-18 21:42:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட்...

2025-01-18 21:36:53
news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23