மேஷம்
உறுதியான எண்ணம் கொண்டு விளங்கும் மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு தன ஸ்தானத்தில் பெயர்ச்சியாகி மறைவு ஸ்தானங்களை பார்வையிடுவதும், உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்வையிடுவதும் சிறப்பான நற்பலன்களைப் பெற்றுத் தரும். சூரியன் ராசியில் உச்சம் பெற்று தனாதிபதியுடன் சம்பந்தம் பெறுவது உங்களின் அரசியல் பிரவேசத்துக்கு நன்மையை பெற்றுத் தரும்.
அரசு சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். லாப ஸ்தானத்தில் சனி அமர்ந்து உங்களின் ராசியை பார்ப்பதும் நற்பலன்கள் அமையும். தொழில் இல்லாதவருக்கு தொழில் அமைத்து தருவதும், வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும் அமையும். கடவுள் மீது அன்பு செலுத்துவீர்கள்.
எதையும் கேட்டுப் பெறாமல் தானே அமையும். உரிமையை விட்டுக்கொடுக்காமல் செயலில் தொடர்ந்து இயங்கி வருவீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் விரைவில் தீர்வுக்கு வரும். உங்களின் பொருளாதார நிலையில் வளர்ச்சி உண்டாகும். ராசிநாதன் விரயத்தில் அமர்வதால் ஏதாவது அசையாத சொத்து விற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அல்லது நிலத்தில் முதலீடு செய்ய வேண்டிவரும்.
ஒரு சிலருக்கு உடல் ரீதியான வைத்தியம் பார்க்க வேண்டிவரும். விளையாட்டுத் துறையில் சற்று வளர்ச்சியைப் பெறுவீர்கள். சரியான கால கட்டத்தில் ஒரு பணியினை செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் மூலம் உடல் அசதி ஏற்பட்டு, உறக்கமின்மை உண்டாகும்.
சந்திராஷ்டம நாட்கள்:
23.05.2024 வியாழன் அதிகாலை 03.23 முதல் 25.05.2024 சனி பகல் 11.03 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
பிரதோசத்தன்று பிரதோச வழிபாடு செய்து, நந்திக்கு அபிசேகப் பொருட்களை வாங்கிக் கொடுத்து, வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் சித்தி தரும்.
ரிஷபம்
சொல்லிலும் செயலிலும் வல்லமை பெற்ற ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குருவாக அமர்ந்து பார்வையிடும் இடம் சிறப்பாக அமையும். உங்களில் தொழில் சார்ந்த பிரச்சனைகளில் விடுதலை பெறுவீர்கள். கொடுத்த இடத்திலிருந்து விரைவில் பணம் வந்து சேரும். குறைந்த பட்ச முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
எதிலும் முன்கூட்டியே யோசித்து செயல்படுவீர்கள். எதை செய்தாலும் அதற்கு ஒரு காரணமும் அதில் நியாயமும் இருக்கும்படி பார்த்துக்கொள்வீர்கள். அரசியலிலும் பொது வாழ்விலும் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்றாலும் சிறு விடயத்தைச் செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு எந்த தடை வந்தாலும் உங்களின் செயற்பாடுகள் மூலம் எதையும் செயற்படுத்தி வருவீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் புதிதாக கற்றுக்கொள்ள ஆர்வம் உண்டாகும். துணை மற்றும் இணையான பாடக் கல்விகளை கற்றுக் கொள்வீர்கள். தொழிற்சங்க பிரதிநிதிகளின் தொடர்பு உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். தொழில் செய்து வருபவருக்கு தொழில் சார்ந்த முயற்சிகள் நற்பலனைத் தரும். அதிரடியான காரியங்களில் திடீர் முடிவுகள் உண்டாகும். புத்திரருக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வெளிநாடு செல்லும் சூழ்நிலை சிலருக்கு உண்டாகும். உங்களின் திருமண தடை நீங்கும். நல்ல வரன் அமையும். புத்திர சந்தானம் கிடைக்கும். சுபகாரிய நிகழ்ச்சி குடும்பத்தில் ஏற்பட்டு மகிழ்ச்சியாக நடத்தி முடிப்பீர்கள். நில பரிவர்த்தனை மூலம் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும். அரசியலில் செலவுகள் உண்டாகும். அதிக ஆர்வத்தை குறைத்துக்கொள்வது நல்லது. பணப்புழக்கம் சீராக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள்:
25-05-2024 சனிக்கிழமை பகல் 11.04 முதல் 27-05-2024 திங்கள் மாலை 04.22 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென் கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமைகளில் காலை 06 - 07 மணிக்குள் விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி அருகம்புல் வைத்து வேண்டிக்கொள்ள வேண்டியது விரைவில் நிறைவேறும்.
மிதுனம்
விடாமுயற்சியுடன் செயலில் ஈடுபடும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு விரைய குருவாக அமைவது அடிக்கடி புதிய செலவுகளை உண்டாக்கும். செலவு செய்வதற்கு முன் காரண காரியங்களை அறிந்து, அதன் பின்னர் செலவழிக்க வேண்டும். வீடு கட்டுதல், காலி மனை வாங்குதல் போன்ற சுபகாரியங்களுக்கு செலவு செய்வதன் மூலம் உங்களுக்கு தேவையற்ற செலவைத் தவிர்க்கலாம்.
உங்களின் யோகாதிபதி சனி லாபஸ்தானத்தை பார்ப்பதால் நல்ல காரியம் செய்ய, தொழிலிலும் உத்தியோகத்திலும் மேன்மை அடைவீர்கள். உங்களின் தொழில் ஸ்தானத்தில் ராசிநாதனுடன் லாபாதிபதி இணைவு பெறுவதும் போட்டிகள் இருந்தாலும் உங்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
அரசியலில் சிறந்த ஆலோசகராக இருப்பீர்கள். பொது விடயங்களில் முன்பிருந்த ஆர்வம் குறையும். நீண்ட நாட்கள் தடைப்பட்ட காரியத்தில் தற்போது தடை நீங்கி சுபீட்சம் பெறுவீர்கள். எதற்கும் தயங்காமல் உங்களின் செயல்களை செய்து வருவீர்கள். எங்கு பயணம் சென்றாலும் முன்னெச்சரிக்கையாக சில காரியங்களை தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டும், ஆலோசனைகளைப் பெற்றும் செயல்படுவீர்கள்.
புதிய திட்டங்களை சில காலம் கழித்து செய்வது நல்லது. விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் காண்பீர்கள். சகோதரரின் மூலம் சிலருக்கு ஆதாயம் உண்டாகும். தொழில் சார்ந்த வெளியூர் பயணம் நற்பலனைப் பெற்றுத் தரும். ஆதாயம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டீர்கள்.
குடும்ப பாரம் சற்று இறங்கும். சூழ்நிலைகளால் சில நேரம் எதிர்பாராத மகிழ்ச்சியும் உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு பாராட்டுகளும் பரிசும் கிடைக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
27-05-2024 திங்கள் மாலை 04.23 மணி முதல் 29.05.2024 புதன் இரவு 07.52 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, நிலம், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் 09 - 10.30 நவகிரக வழிபாடு செய்தும் அரளி பூ சிவப்பு நிற பூ மாலை சூரியன், செவ்வாய்க்கு போட்டு வழிபட்டு வரவும் தொழிலில் முன்னேற்றம், பொருளாதார மேன்மை உண்டாகும்.
கடகம்
திடமான மனவலிமை கொண்டிருக்கும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு மூன்றாம் பார்வையாக பார்வையிடுவதால், இதுவரை இருந்த பலவிதமான கஷ்டங்களும் வீண் அலைச்சலும் உடல்நல குறைபாடுகளும் இனி விலகும். சொல்ல நினைத்ததை சொல்லாமல் பல காலம் தயங்கி வந்தீர்கள். இனி தைரியமாக அதை சொல்லிவிடுவீர்கள். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு விதமான மாற்றங்கள் உங்களின் வாழ்க்கையில் சந்தித்து வந்தீர்கள். அதிலிருந்து மீண்டு உங்களின் எண்ணங்களை செயல்படுத்த தொடங்குவீர்கள்.
குரு லாபஸ்தானத்திலிருந்து முயற்சிகளின் ஸ்தானத்தை பார்வையிடுவதால் உங்கள் முயற்சி வெற்றியைத் தரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை சனியும் குருவும் பார்ப்பதால் பூரவீகச் சொத்து சார்ந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
வழக்கு இருந்தால் விரைவில் முடிவுக்கு வரும். காலத்தையும் நேரத்தையும் விரையம் செய்யாமல் குறித்த நேரத்தில் எல்லாவற்றையும் செய்துவிடுவீர்கள். அட்டம சனி காலம் என்பதால் பிணையம் இடுவது, பிறருக்கு பணம் வாங்கித் தருவது, சிறிய முதலீடுகள் மூலம் ஒன்லைன் தொழில் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
குடும்ப சுமைகள் குறையும். திருமண தடைகள் நீங்கி, நல்ல வரன் அமையப் பெறுவீர்கள். தாயார் உடல் நலனில் முன்னேற்றம் உண்டாகும். கலையின் ஆர்வத்தால் பல நிறுவனங்களில் முயற்சி செய்தும் பலன் இல்லாமல் போன நிலை மாறி நல்ல வாய்ப்பு உங்களுக்கு தேடி வரும்.
உயர்ந்த இடத்திலிருந்து தாழ்ந்தவர்களை பார்த்து நல்ல குணங்களையும் நல்ல செயல்களையும் வளர்த்துச் செல்வீர்கள். அரசியலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சகோதரர்களின் உறவு ஒன்றாக இருக்கும். படித்த கல்விக்கு தகுந்த வேலை கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
02-05-2024 வியாழன் பகல் 11.44 முதல் 04-05-2024 சனி பகல் 02.11 மணி வரை.
29-05-2024 புதன் இரவு 07.53 மண் முதல் 31-05-2024 வெள்ளி இரவு 10.25 மணி வரையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் வெற்றியை தரும்.
சிம்மம்
ஆற்றலும் வலிமையும் கொண்டு விளங்கும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தை பார்வையிடும் குருவால் உங்களின் பொருளாதார சூழ்நிலைகள் மாறும். தேவைகளுக்கு ஏற்ப பண வரவு வந்து சேரும். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். கண்டக சனி காலம் என்பதால் உங்களின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். தேடிச் சென்று உறவுகளை புதுப்பித்துக்கொள்வீர்கள். எதிர்பாராத நன்மைகளை அடைவீர்கள்.
புதிய திட்டத்தை செயற்படுத்துவதால் உங்களின் முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். முக்கிய நிகழ்வுகளில் பங்குபற்றுவீர்கள். அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் செயற்பாடுகள் பாராட்டும்படியாக அமையும். எதற்கும் துணிந்து செயல்களை தொடர்ந்து செய்வீர்கள். செய்யும் தொழிலில் முதலீடுகளை நிதானித்து செய்வது நல்லது.
உங்களின் உத்தியோக நிலை உயர்ந்த இடத்திலிருந்து பார்க்கும் நிலை உண்டாகும். தான தர்மங்களில் அதிக நாட்டம் உண்டாகும். ஆன்மிக செயல்களில் ஈடுபாடு கொள்வீர்கள். உங்களின் ராசிநாதன் உச்சம் பெறுவதால் எந்த இடத்திலும் உங்களுக்கு மரியாதை சிறப்பாக அமையும். வாழ்வில் இதுவரை நடந்த கசப்பான நிகழ்வுகள் இனி வராமல் பல காரியங்கள் மேன்மையை தரும்.
காரியத்தை செயல்படுத்துவதில் இருந்த சிக்கல் அகலும். குறைந்த முதலீடுகளில் செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தங்க நகை வியாபாரிகளுக்கு கூடுதல் ஆதாயம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். விவசாயத்தில் சிலருக்கு கூடுதல் விளைச்சல் உண்டாகி வருமானம் பெருகும்.
சந்திராஷ்டம நாட்கள்:
04-05-2024 சனி பகல் 02.12 முதல் 06.05.2024 திங்கள் மாலை 04.39 மணி வரை.
31-05-2024 வெள்ளி இரவு 10.26 முதல் 02-06-2024 ஞாயிறு இரவு 12.51 மணி வரையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி வேண்டிக்கொள்ள உங்களின் அனைத்து காரியங்களும் வெற்றி தரும்.
கன்னி
திறமையுடன் செயற்படும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் ராசிநாதனின் பார்வை பெறுவதும் ஆற்றலுடன் செயற்பட வைத்து, நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும். எதையும் திறமையுடனும் வலிமையுடனும் செயற்படுத்துவீர்கள். உங்களின் நாளாந்த பணிகளை சுறுசுறுப்புடன் செயற்படுத்திக் காட்டுவீர்கள்.
உங்களின் ராசிக்கு சத்ரு ஸ்தானத்தில் சனி அமர்வதால் உங்களின் மறைமுகமான எதிரிகளின் வாழ்க்கை சூழ்நிலைகளை மாற்றி, எதிர்த்து போராடி, வெற்றி பெறுவீர்கள். உங்கள் மறைவு ஸ்தானத்தில் சூரியன் உச்சமாக அமர்வதால் அரசியலிலும் பொது வாழ்விலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் மதிப்பு உயரும். உங்களை ஒதுக்கிய உறவினர்கள் மீண்டும் உங்களின் உறவுகளை விரும்புவார்கள்.
கல்வியிலும் ஆராய்ச்சி அறிவியலிலும் வளம் பெறுவீர்கள். தனித்திறமை உங்களிடம் வெளிப்படும். திருமண காரியம் விரைவில் தடை நீங்கி நடந்தேறும். தொழிலில் பின்னடைவு இருந்த நிலை மாறி நல்ல தொழில் முன்னேற்றம் உண்டாகும். காரணத்திலும் ஒரு காரியம் இருக்கும்படி செயற்பாடுகளில் உங்களின் சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வீர்கள்.
பொது நலனில் அக்கறை கொண்டு செயற்படுவீர்கள். உங்களின் செயல்களுக்கு பக்க பலமாக உதவி செய்ய, உங்களின் நண்பர்கள் வருவார்கள். புதிய பாதையில் பயணித்து மேன்மை அடைவீர்கள். ஒரு கருத்தை மையப்படுத்தி நீங்கள் பேசும் பேச்சுக்கு எதிர்பாராத நற்பலன்கள் உண்டாகும். கலைத்துறையினர் கலை ஆர்வத்தின் மூலம் புதிய முயற்சிகளால் வளம் பெறுவீர்கள்.
புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சி உண்டாகும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வீர்கள். வரவுக்குள் செலவு செய்து வருமானத்தை தக்கவைத்துக் கொள்வீர்கள். அதிக மனக்கவலைகளை நீக்கி, மனதில் அமைதியை, சாந்தத்தை உருவாக்கிக்கொள்வீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
06-05-2024 திங்கள் மாலை 04-40 முதல் 08-05-2024 புதன் இரவு 07.59 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு பூ சாற்றி இலுப்பெண்ணெய் தீபமேற்றி வேண்டிக்கொள்ள உங்களின் சகல காரியங்களும் வெற்றியைத் தரும்.
துலாம்
எந்த காரியத்தைச் செயற்படுவதிலும் ஆர்வம் காட்டும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனின் பார்வையும், உங்களின் லாபாதிபதி சூரியனின் பார்வையும் பெறுவதால் நல்ல தொழில் முன்னேற்றம் உண்டாகும். கடவுளின் அருளால் உங்களுக்கு சகல காரியங்களும் நன்மையை உண்டாக்கும். உங்களின் நாளாந்த பணிகளில் எதையும் முன்கூட்டியே யோசித்து செயற்படுவீர்கள்.
இதுவரை குரு பார்வையைப் பெற்று வந்தீர்கள். இனி உங்களின் தனஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதாரத்திலும் பணப் புழக்கத்திலும் வளம் பெறுவீர்கள். குரு பார்க்கும் இடம் சிறப்பாக அமையும். உங்களின் சுகஸ்தானத்தை குரு பார்ப்பது, வாகனம் புதிதாக வாங்க வாய்ப்புகள் அமையும்.
உங்களின் கைப்பேசியை மாற்றிக்கொள்வீர்கள். வீடு கட்டும் திட்டம் செயற்பட தொடங்கும். புதிய வீடு கட்டுதல், வீட்டுமனை வாங்குதல் சுப செலவுகள் உண்டாகும். வீட்டுக்கு தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். மருத்துவ காப்பீடு செய்துகொள்வீர்கள். வெளிநாடு சென்று வர சிலருக்கு வாய்ப்புகள் அமையும். மகிழ்ச்சியான இன்ப சுற்றுலா சென்று வருவீர்கள்.
புதிய நண்பர்களின் சேர்க்கை மேலும் உங்களுக்கு நல்ல அனுபவத்தை உண்டாக்கும். பஞ்சம ஸ்தானத்தில் சனி அமர்ந்து தனஸ்தானத்தை பார்ப்பது உங்களின் தொழிலில் திறம்பட செயல்படும் மேன்மையை உருவாக்கும். தாயாரின் உடல் நலனின் முன்னேற்றம் உண்டாகும்.
பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். உங்களின் விரையாதிபதி புதன் ஆறில் மறைவதால் பழைய கடன் தீரும். புதிய கடன் மூலம் உங்களின் நீண்ட நாள் கஷ்டத்திலிருந்து மீண்டு வருவீர்கள். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அரசியலிலும் பொது வாழ்விலும் ஈடுபாடு கொண்டாலும் அதிக முயற்சிகளை தவிர்த்துவிடுவீர்கள். மன அழுத்தம் குறையும்.
சந்திராஷ்டம நாட்கள்:
08-05-2024 புதன் இரவு 08.00 முதல் 10-05-2024 வெள்ளி இரவு 01.01 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, சிவப்பு, நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடும், சுப்ரமணியர் வழிபாடும் செய்து, விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ள சகல காரியங்களிலும் நன்மை கிட்டும்.
விருச்சிகம்
சுறுசுறுப்பாக எதையும் செயல்படுத்தத் துடிக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதால் சனியால் வரும் அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் குறையும். எளிதில் காரியங்களை செய்து முடிப்பீர்கள். உங்களின் தன பூர்வ புண்ணியாதிபதியான குரு உங்களின் ராசியை பார்ப்பதால் இதுவரை பல்வேறு சிரமங்களையும், சில உடல் உபாதைகளையும் அனுபவித்து வந்த உங்களின் நிலையில்... நல்ல மாற்றம் உண்டாகி, நோயிலிருந்து விடுபடுவீர்கள்.
உங்களின் ராசிநாதன் பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் லாபஸ்தானத்தையும் விரையஸ்தானத்தையும் பார்வையிடுவது, உங்களின் செயல்களில் துணிச்சலும் மனோ வலிமையும் உண்டாக்கும். காரியத்தில் முழுமையான ஈடுபாடுகளுடன் செயல்படுவீர்கள். காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் செயலில் திறனுடன் செய்து வருவீர்கள்.
விவசாய பணிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிற்சங்க பணிகளில் முக்கிய பொறுப்புகளை மேற்கொண்டு செயற்படுவீர்கள். தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். சிலருக்கு வேலை பார்க்குமிடத்தில் பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படலாம்.
வெளிநாடு சென்று வர வாய்ப்புகள் அமையும். நேர்மையுடன் செயல்பட வேண்டுமென்று எண்ணுவீர்கள். விளையாட்டுத்துறையில் எதையாவது சாதிக்க வேண்டுமென்று எண்ணி செயற்படுவீர்கள். கலைத்துறையினருக்கு சில காரியங்கள் தடைப்பட்டாலும் உங்களின் நாளாந்த தேவைகள் பூர்த்தியாகும்.
சொன்னபடி நடக்க வேண்டுமென்று எண்ணுவீர்கள். உங்களுக்கு கொடுத்த வேலையை விரைவில் செய்து முடித்து, நற்பெயர் பெறுவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தனி ஒருவராக இருந்து பலவித காரியங்களில் ஈடுபட்டு நன்மையை பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
10-05-2024 வெள்ளி இரவு 01.02 முதல் 13-05-2024 திங்கள் கலை 08.23 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, ஒரெஞ்ச், மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணி ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி, சிவப்பு நிற பூவால் மாலை சாற்றி, வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் வெற்றியைத் தரும்.
தனுசு
எந்த காரியத்தையும் தனித்துவமாக செயல்படுத்தும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் சனி அமர்ந்து உங்களின் பணிகளை சரியாக செய்ய முழு ஒத்துழைப்பைத் தருவார். உங்களின் ராசிநாதன் விரையஸ்தானத்தையும், தனஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்வையிடுவது உங்களின் வாழ்வில் புதிய புத்துணர்வுகளை ஏற்படுத்தும்.
குறுகிய காலத்தில் உங்களின் வளர்ச்சியில் ஏற்றம் வரும். குரு தனஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று நலம் பெறுவீர்கள். ஏழரை சனி காலங்களில் பட்ட பல கடன்களிலிருந்து விடுதலை பெறுவதும், தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொண்டு சேமிப்புகளை உருவாக்கிக்கொள்வதும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
எதையும் குறித்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டுமென்று எண்ணுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். இதனால் நன்மைகள் உண்டாகும். வங்கி சேமிப்புகளும், புதிய வங்கி கடன் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்வதும் மேன்மையை பெற்றுத் தரும்.
காரியத்தில் கவனம் செலுத்தி, நீங்கள் நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வளர்ச்சிப்பாதையை உன்னிப்பாக கவனித்து செயற்படுத்துவீர்கள். அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் செயல்கள்.. பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுத் தரும். கலை துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும்
எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவதால்... எந்த இடையூறுமின்றி செயல்படுவீர்கள். மாணவர்களின் குறுகிய கால பயிற்சி கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்க.. புதுபித்துக் கொள்ள.. சிலருக்கு வாய்ப்பு அமையும். சிறப்பான மாதமாக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள்:
13-05-2024 திங்கள் காலை 08.24 முதல் 15-05-2024 புதன் மாலை 06.13 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடமேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளின் கௌமாரி அம்மன் வழிபாடு செய்து வேப்பெண்ணெய் தீபமிட்டு சிவப்பு மலர் மாலை சாற்றி வேண்டிக் கொள்ள தடை நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
மகரம்
விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள பாடுபடும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவது நல்ல சூழ்நிலைகளை உருவாக்கி தரும். ஏழரை சனியாக இருந்தாலும் உங்களின் ராசிநாதன் என்பதால் தனஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி தருவார். உழைப்பால் முன்னேற்றம் அடைய தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவார்.
உங்களின் நல்ல முயற்சிக்கு தொடர்ந்து நற்பலன்கள் அமையும். அரசியலில் உங்களின் செல்வாக்கு மேன்மையைத் தரும். நாளைய பயன்பாட்டுக்குரிய செயல்களை இன்றே துவங்கி சிறப்பாக செயல்படுவீர்கள். அரசியல் சூழ்நிலைகள் மாறும். எதிர்கால திட்டங்கள் நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
கலை துறையினருக்கு தொடர்ந்து வளர்ச்சி பணிகளில் ஈடுபாடுகள் கொண்டு செயல்படுவீர்கள். எதையும் உடனே செய்து முடிக்க வேண்டுமென்ற எண்ணம் உதயமாகும். பல விடயங்களில் பொருளாதார தட்டுபாடுகளால் தடைபட்ட சூழ்நிலை மாறி, பொருளாதார மேன்மை அடைய தேவையான வாய்ப்புகள் தேடிவரும்.
பொது வாழ்வில் ஆர்வமுடன் மக்களின் தேவைகளுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவீர்கள். காரிய சித்தி பெற தேவையான உதவிகள் உங்களுக்கு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப பிரச்சனைகளுக்கு உரிய முயற்சிகளால் சாதகமான சூழ்நிலை உருவாகும். பெண்களுக்கு பேச்சாற்றலும் தலைமை பண்பும் கிடைக்கும்.
விளையாட்டு, கேளிக்கைகளில் ஆர்வம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு... உங்களின் வாழ்வில் பல மாற்றங்களை உண்டாக்கும். அரசியல் சூழ்நிலை மாறும். இது சம்பந்தமான சில பேச்சு வார்த்தைகள் உடன்பாடுகளை எட்டும் வகையில் அமையும். மொத்தத்தில் சிறப்பான மாதமாக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள்:
15-05-2024 புதன் மாலை 01.14 முதல் 18-05-2024 சனி அதிகாலை 05.39 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வருவதும், பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டி கொள்வதும்.. சகல காரியத்திலும் ஜெயம் கிட்டும்.
கும்பம்
திடமான நம்பிக்கையுடன் எதையும் செயல்படுத்தும் கும்ப ராசி வாசர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமர்வதால் உங்களின் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் ஏற்படும். கடமையை செய்வதால் சிறிதும் பிறளாமல் செயல்படுவீர்கள். உங்களின் அரசியல் வாழ்க்கை இம்மாதம் அற்புதமான பலன்களை பெற்று தரும். கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் உங்களின் கொள்கையிலிருந்து விடுபடமாட்டீர்கள்.
உங்களின் கொள்கை பிடிப்பும், தைரியமும் நற்பலனைப் பெற்றுத் தரும். சரியான பாதையை தெரிவு செய்து அதன் வழியில் பயணம் செய்வீர்கள். பொது வாழ்வில் உங்களின் நேர்மை உங்களுக்கு செயல்களின் ஊக்கத்தை பெற்று தரும். எதிலும் தன்னிச்சையான முடிவுகளை எடுத்துச் செயல்படுவீர்கள். குறைந்தபட்ச முதலீடுகளில் நல்ல லாபம் பெறுவீர்கள்.
நாளாந்தம் அழியும் காய்கறி, தண்ணீர், குளிர் பானங்கள், பழ வகைகளில் தொழில் செய்பவருக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். முக்கிய பிரமுகரின் சந்திப்பு உங்களின் எதிர்கால நலனுக்கு பயனுள்ளதாக அமையும். விருப்பமின்றி செய்த காரியம் கூட உங்களுக்கு கைகூடும் உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆசிரியர் பணியில் உங்களின் செயல்பாடுகள் பாராட்டும்படி அமையும்.
குரு பார்வையால் இதுவரை இருந்து செலவீனம் குறைந்து சேமிப்புக்கு வழிவகுக்கும். கலைத்துறையினருக்கு வெளி இடங்களில் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும். புதிய திட்டங்களுக்காக சிறிது காலம் வரை காத்திருப்பது நல்லது. சிறு கடன்களை விடுவித்து கொண்டு பலன் அடைவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் வந்தாலும், அதனை எளிதில் சரி செய்து விடுவீர்கள். விவசாயம், கால்நடை வளர்ப்பு மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணபுழக்கம் இருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
18-05-2024 சனிக்கிழமை அதிகாலை 03.40 முதல் 20-05-2024 திங்கள் மாலை 05.14 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் 09 - 10.30 பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு தொடர்ந்து வழிபட்டு வர சகல செயல்பாடுகளும் உங்களுக்கு நன்மையாக அமையும்.
மீனம்
மனவலிமையுடன் எந்த செயலையும் செய்யும் மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் குரு பெயர்ச்சியாகி இருப்பது உங்களின் சகல முயற்சிகளிலும் நன்மையை தரும். ஆறாமிட அதிபதி தனஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் வங்கி கடன் மூலம் சிலருக்கு நன்மையும், நற்பலன்களும் உண்டாகும். உங்களின் தனி திறமையால் சில காரியங்களை செயல்படுத்தினாலும்.. எதிரிகளின் மூலம் சில தடைகள் வந்து சேரும் என்பதால் எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வெளிநாடு பயணம் சிறப்பாக அமைந்தாலும் விரையச் செலவுகள் வந்து சேரும்.
சேமிப்புகள் கரையும். உங்களின் செலவுகள் அதிகரிக்கும். இருந்தாலும் கூட்டு தொழிலில் சிலருக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். எதிர்கால திட்டங்களுக்கு முன்வடிவம் செய்து கொள்வீர்கள்.
குடும்பத்திலிருந்த சில சச்சரவுகளுக்கு முடிவுக்கு வரும். காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் கடமையைச் சரியாக செய்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வீர்கள். இறை வழிபாடுகளின் மூலம் ஆறுதலைத் தேடுவீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வரவேற்பு இருக்கும். சிலருக்கு அரங்கேற்றம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாராட்டுப் பெறுவீர்கள்.
இசை கலைஞர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். புதிய திட்டங்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலனை எதிர்பார்த்து, சிலரின் உதவிகளை நாடி, அதன் மூலம் வளம் பெறுவீர்கள். தர்ம காரியங்களில் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். காலத்தையும் சரியாக செயல்படுத்தி பயன்பெறும் வகையில் செயல்பட்டு நன்மை அடைவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
20-05-2024 திங்கள் மாலை 05.15 முதல் 23-05-2024 வியாழன் அதிகாலை 03.22 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் 09 - 10.30 பைரவருக்கு எட்டு நல்லெண்ணெய் தீபமேற்றி, சிவப்பு நிற பூ வேண்டிக் கொள்ள, உங்களின் தடைகள் நீங்கி வளம் பெறுவீர்கள்.
(கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM