(ஆர்.சேதுராமன்)
இங்கிலாந்தின் பிரபல றக்பி வீரர் பில்லி வுனிபோலா ஸ்பானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மதுபான விடுதியொன்றில் ஊழியர்கள், வாடிக்கையாளர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
மத்தியதரைக்கடலிலுள்ள ஸ்பானிய தீவான மஜோர்காவில் கடந்த 28 ஆம் திகதி அன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
31 வயதான வுனிபோலா, கடந்த 28 ஆம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் தனது ஷேர்ட்டை கழற்றிவிட்டு, மதுபான விடுதியின் வாடிக்கையாளர்களையும் ஊழியர்களையும் போத்தல்கள், கதிரைகள் மூலம் அச்சுறுத்தினார் என ஸ்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
6 அடி, 2 அங்குல உயரமும் 127 கிலோ கிராமுக்கு அதிகமான எடையையும் கொண்டுள்ள பில்லி வுனிபோலாவை கைது செய்வதற்காக பொலிஸார் இரு தடவைகள் டேசர் சாதனத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், கைவிலங்கிடப்பட்டு, அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் கட்டிலுடன் இணைத்துக் கட்டிவைக்கப்பட்டிருந்தார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையையடுத்து, வுனிபோலாவுக்கு 240 யூரோ அபராதம் விதிக்கப்பட்டதுடன், காயமடைந்த தரப்புக்கு இழப்பீடாக அவர் 500 யூரோ வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதாக ஸ்பெய்னின் பலேரிக் தீவுகளின் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பில்லி வுனிபோலா கூறுகையில், இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம், ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போன்று வன்முறை, சண்டை எதுவும் இடம்பெறவில்லை. நான் எவரையும் போத்தல்கள், கதிரைகள் சகிதம் அச்சுறுத்தவில்லை' எனக் கூறியுள்ளார்.
மேற்படி சம்பவத்துக்காக மன்னிப்பு கோரியுள்ள அவர், அபராதத்தைச் செலுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் பிறந்த பில்லி வுனிபோலா, இங்கிலாந்து அணிக்காக 75 போட்டிகளில் விளையாடியுள்ளார். இறுதியாகக் கடந்த வருடம் நடைபெற்ற உலக கிண்ணத் தொடரில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM