ஒராங்குட்டான் காயத்திற்கான சிகிச்சைக்கு மருத்துவ தாவரத்தை பயன்படுத்துகிறது ; விஞ்ஞானிகள் தெரிவிப்பு

Published By: Digital Desk 3

04 May, 2024 | 08:50 PM
image

காட்டு ஒராங்குட்டான் காயத்திற்கு சிகிச்சையளிக்க மருத்துவ தாவரத்தை பயன்படுத்துவதாக  விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுமாத்ரா தீவைச் சேர்ந்த ராகுஸ் (Rakus) என்ற ஒராங்குட்டான் மற்றொரு ஒராங்குட்டானுடன் சண்டையிட்ட போது அதற்கு வலது கண்ணுக்குக் கீழே முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இந்தோனேசியாவின் பாதுகாக்கப்பட்ட மழைக்காடு பகுதியான Suaq Balimbing ஆராய்ச்சி தளத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், காயத்திற்குள்ளான ராகுஸ் மூன்று நாட்களுக்குப் பிறகு விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

அதாவது, ராகுஸ் காயத்திற்குள்ளான பின்பு ஏற்படும் வலி, பக்டீரியா, அழற்சி , பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஒக்ஸிஜனேற்றம் போன்றவற்றை குணப்படுத்துவதற்கு ஒரு தாவரத்தைப் எவ்வாறு பயன்படுத்தியது என  வியாழக்கிழமை ஆராய்ச்சியாளர்கள் விவரித்துள்ளனர்.

இதனை, ஜேர்மனியில் உள்ள விலங்குகளின் நடத்தை தொடர்பான மேக்ஸ் பிளாங்க் கல்வியகத்தின்விலங்கு நடத்தை ஆய்வாளர் இசபெல் லாமர் விபரிக்கையில், 

ராகுஸ் மருத்துவ தாவரத்தை பறித்து வாயில் போட்டு மென்று அதிலிருந்து கிடைத்த திரவத்தை பல முறை காயத்தின் மீது தடவியது. பின்னர் மென்ற தாவரத்தை மருத்துவர்களால் காயத்திற்கு போடப்படும் கட்டுப்போல் போட்டது. ராகுஸ் அந்த மருத்துவ தாவரத்தை சாப்பிட்டது.

ஐந்து நாட்களின் பின்னர் காயம் நோய்த்தொற்றின் அறிகுறிகள் எதுவுமின்றி ஐந்து நாட்களுக்குள் மறைந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த தாவரம் அகார் குனிங் என்று அழைக்கப்படும் ஒரு பசுமையான கொடியாகும். அறிவியல் பெயர் ஃபைப்ரௌரியா டின்க்டோரியா. 

சீனா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் பரவலாக காணப்படும் இந்த தாவரம் மலேரியா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சதுப்பு நில வனப்பகுதியில் இந்த தாவரம் அரிதாகவே ஒராங்குட்டான்களால் உண்ணப்படுகிறது.  சுமார் 150 சுமாத்ரா ஒராங்குட்டான்கள் ஆபத்தான நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

"எங்கள் அறிவைப் பொறுத்தவரை, ஒரு காட்டு விலங்கு மருத்துவ குணங்கள் கொண்ட தாவர வகைகள் மூலம் காயத்திற்கு சிகிச்சை அளித்தமை இதுவே முதல் ஆவணமாகும்  என பரிணாம உயிரியலாளரான ஆய்வின் மூத்த எழுத்தாளர் கரோலின் ஷுப்ளி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்