bestweb

ஆசியாவில் கடும் வெப்பம் அலை

Published By: Digital Desk 3

04 May, 2024 | 11:54 AM
image

’வெப்ப அலை’ என்பது சாதாரண வெப்ப நிலையை (TEMPERATURE) விட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்து தொடர்ச்சியாக 3 நாட்கள் அல்லது அதற்கு மேல் தொடர்வதைக் குறிக்கும். உலக வானிலை ஆய்வு அமைப்பின்படி தொடர்ச்சியாக 5 தினங்கள் அல்லது அதற்கு மேல் சாதாரண வெப்பநிலையை விட '5 டிகிரி செல்சியஸ்' வரை அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

அதாவது, சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், கடலோரப் பகுதிகளில் குறைந்தபட்சம் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், மலைப் பகுதிகளில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தால், அது வெப்ப அலையாக அறிவிக்கப்படும். 

இந்நிலையில்,  முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆசியா முழுவதும் வெப்பம் அதிகரித்து வருகிறது. பல ஆசிய நாடுகளில் கடந்த வாரம் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வெப்ப அலை எழும்பத் தொடங்கியுள்ளது.

அதன்படி, மியன்மாரில் வெப்பம் ஆகக் கூடுதலாக 45 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

அதனையடுத்து, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பங்களாதேஷ், லாவோஸ், வியட்நாம், நேபாளில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சீனாவில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், குறைவான வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் இந்தோனேஷியாவிலும், 37 டிகிரி செல்சியஸ் பிலிப்பைன்ஸிலும், 36 டிகிரி செல்சியஸ் சிங்கப்பூரிலும் பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது...

2025-07-18 08:02:09
news-image

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3...

2025-07-17 13:14:07
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணையை இரத்துசெய்யவேண்டும்...

2025-07-17 12:07:06
news-image

ஈராக்கில் தீவிபத்தில் 50க்கும் அதிகமானவர்கள் பலி

2025-07-17 11:51:39
news-image

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி...

2025-07-17 11:34:18
news-image

தாயின் பாதையில் தனயன் - அங்கோலாவில்...

2025-07-17 10:58:55
news-image

பிரிட்டனின் இரகசிய ஆவணத்தில் உள்ள விபரங்கள்...

2025-07-17 10:40:13
news-image

நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது:...

2025-07-17 09:36:00
news-image

பெல்ஜியத்தில் டுமாரோலேண்ட் இசை விழாவின் பிரதான...

2025-07-17 09:08:12
news-image

சிரியாவின் இராணுவதலைமையகம் ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள...

2025-07-16 20:22:03
news-image

பன்னாட்டு படையினருக்கு உதவிய ஆப்கான் பிரஜைகள்...

2025-07-16 16:15:46
news-image

காசாவின் உணவு விநியோக மையத்தில் குழப்பநிலை-...

2025-07-16 15:39:13