(நெவில் அன்தனி)
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு, கிண்ணியா, அம்பாறை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆற்றல்மிக்க கால்பந்தாட்ட வீரர்களை களம் காணச் செய்யும் லங்கா புட்போல் கப் (இலங்கை கால்பந்தாட்ட கிண்ணம்) நொக் அவுட் போட்டி இன்று (04) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டரை வருடங்களுக்கு மேல் இலங்கையில் முதல் தர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக், சம்பியன்ஸ் லீக் கால்ப்நதாட்டப் போட்டிகள் நடைபெறவில்லை.
இதனால் கால்பந்தாட்டத்திற்கு யாராவது புத்துயிர் கொடுக்க மாட்டார்களா என கால்பந்தாட்ட வீரர்களும் இரசிர்களும் பெரும் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருந்தனர்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய நிருவாகம் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்கு சிறந்த திட்டங்களையும் வியகங்களையும் வகுத்துள்ள போதிலும் போட்டிகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.
மூவேந்தர்களில் ஒருவர் கால்பந்தாட்டத்தை செழிப்புமிக்க விளையாட்டாக மாற்றுவதற்கு முயற்சித்துவருகின்றபோதிலும் ஏதோ காரணங்களால் அது தடைப்பட்ட வண்ணம் இருக்கிறது.
இதன் காரணமாகவே லங்கா ஸ்போர்ட்ஸ் குறூப் ஸ்தாபகரும் எக்ஸ்போ லங்கா முகாமைத்துவப் பணிப்பாளருமான சய்ப் யூசுப் தனது தனிப்பட்ட எண்ணக்கருவில், தனது சொந்த அனுசரணையில் ல்ஙகா புட்போல் கப் என்ற பெயரில் கால்பந்தாட்டத்திற்கு புத்துயிர் கொடுக்க முன்வந்துள்ளார்.
'இலங்கையில் பிரதான கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்படுவது தாமதித்துக்கொண்டு செல்வதால் வீரர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். யாராவது கால்பந்தாட்டத்தை ஆரம்பித்தால் மற்றையவர்களும் அதனைப் பின்பற்றி போட்டிகளை நடத்த முன்வருவார்கள் என்பதாலேயே நான் லங்கா புட்போல் கப் நொக் - அவுட் போட்டியை ஆரம்பிக்க முன்வந்தேன்.
'இப் போட்டியை லீக் அடிப்படையில் தொழில்முறை கால்பந்தாட்டமாக நடத்த எனது ஏற்பாட்டுக் குழு திட்டமிட்டது. ஆனால், இம்முறை நொக் அவுட் முறையில் நடத்துவதற்கு தீர்மானித்தோம். அடுத்த வருடத்திலிருந்து இப் போட்டியை சொந்த மைதானம், அந்நிய மைதானம் என்ற இரண்டு கட்டங்களைக் கொண்ட லீக் போட்டியாக நடத்துவோம்' என சய்ப் யூசுப் தெரிவித்தார்.
இந்த அழைப்பு நொக் அவுட் போட்டிகளில் எட்டு புதிய பெயர்களில் அணிகள் பங்குபற்றவுள்ளன. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு திசைகளிலிருந்தும் வீரர்கள் இப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.
இந்த அணிகளுக்கு அதிசிறந்த பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பங்குபற்றும் அணிகளும் பயிற்றுநர்களும்
சென்ட்ரல் எவ்.சி. (அஷ்பாக் அஹ்மத்), கலம்போ எவ்.சி. (எம். ஹசன் றூமி), ஈஸ்டன் எவ்.சி. (மொஹமத் மொஹைதீன்), கோல் எவ்.சி. (ஈ.பி. சன்ன), ஜெவ்னா எவ்.சி. (ரட்னம் ஜஸ்மின்), கண்டி எவ்.சி. (ரௌமி மொஹைதீன்), களுத்துற எவ்.சி. (ரமீஸ் ஹசன்), நிகம்போ எவ்.சி. (சத்துர குணரட்ன)
ஒவ்வொரு அணியிலும் 3 வெளிநாட்டு வீரர்கள் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போட்டி விபரம்
ஜெவ்னா எதிர் களுத்துற மற்றும் நிகம்போ எதிர் கண்டி ஆகிய 2 கால் இறுதிப் போட்டிகள் இன்று சனிக்கிழமையும் ஈஸ்டன் எதிர் கலம்போ மற்றும் சென்ட்ரல் எதிர் கோல் ஆகிய 2 கால் இறுதிப் போட்டிகள் நாளை ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.
அரை இறுதிப் போட்டிகள் மே 11, 12ஆம் திகதிகளில் நடைபெறுவதுடன் இறுதிப் போட்டி மே 18 அல்லது 25ஆம் திகதி நடைபெறும். போட்டிகள் யாவும் சிட்டி லீக் மைதானத்தில் நடைபெறும்.
இந்த நொக் அவுட் கால்பந்தாட்டத்தில் சம்பியன் பட்டத்தை சூடும் அணிக்கு லங்கா புட்போல் கிண்ணத்துடன் 10 இலட்சம் ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 5 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்.
இதனை விட தங்கப் பாதணி, தங்க கையுறை, நேர்த்தியான விளையாட்டு ஆகிய விசேட விருதுகளும் வழங்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM