மேலதிக நேர வெற்றி கோலின் மூலம் ஒலிம்பிக் தகுதியைப் பெற்றது ஈராக்

04 May, 2024 | 10:30 AM
image

(நெவில் அன்தனி)

ந்தோனேசியாவுக்கு எதிராக தோஹா, அலி ஜஸிம் பின் கலிஃபா விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண 3ஆம் இடத்தை தீர்மானிக்கும் போட்டியின் மேலதிக நேரத்தில் போட்ட வெற்றி கோலின் பலனாக பாரிஸ் 2024 ஒலிம்பிக் கால்பந்தாட்டத்தில் பங்குபற்றும் தகுதியை ஈராக் பெற்றுக்கொண்டது.

ஜப்பான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஒலிம்பிக் கால்பந்தாட்டத்தில் பங்குபற்ற 3ஆவது ஆசிய நாடாக ஈராக்,  தகுதிபெற்றது.

எட்டு வருடங்களின் பின்னர் இந்தத் தகுதியைப் பெற்ற ஈராக், ஒலிம்பிக் கால்பந்தாட்ட வரலாற்றில் 6ஆவது தடவையாக பங்குபற்றவுள்ளது.

இந்தோனேசியாவுக்கு எதிரான 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியின் மேலதிக நேரத்தில் (96ஆவது நிமிடம்) அலி ஜஸிம் போட்ட வெற்றி கோல், ஈராக்கிற்கு ஒலிம்பிப் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பகுதியில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் போட்டிருந்தன.

போட்டியின் 19ஆவது நிமிடத்தில் ஐவர் ஜெனர் 25 யார் தூரத்திலிருந்து முதலாவது கோலைப் போட்டு தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவை பரவசத்தில் ஆழ்த்தினார்.

ஆனால் அந்த பரவசம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

எட்டு நிமிடங்கள் கழித்து ஸெய்த் தஹ்சீன் மிக இலகுவான கோல் ஒன்றைப் போட்டு ஈராக் சார்பாக கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தில் சூடு பிடித்ததுடன் இரண்டு அணிகளும் வெற்றி கோலுக்காக ஆக்ரோஷமாக விளையாடின. அதேவேளை, ஈராக்கின் ஆதிக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. எனினும் அதன் கோல் போடும் முயற்சிகள் தடுக்கப்பட்ட வண்ணம் இருந்தது.

போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது கோல் நிலை 1 - 1  என சமமாக இருந்ததால் மத்தியஸ்தரால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேரத்தின் முதலாவது பகுதியின் 96ஆவது நிமிடத்தில் இந்தோனேசியாவின் கோல் எல்லையை ஆக்கிரமித்த ஈராக் மத்திய கள வீரர் அலி ஜசிம் அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார். அதன் பின்னர் ஈராக் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வெற்றியையும் ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்து கொண்டது.

இப்போட்டியில் தோல்வி அடைந்த இந்தோனேசியா, ஒலிம்பிக் தகுதியைப் பெறுவதற்கான தீர்மானம் மிக்க போட்டியில் ஆபிரிக்க நாடான கினியை எதிர்வரும் 9ஆம் திகதி எதிர்த்தாடும்.

அப்போட்டியில் வெற்றி பெறும் அணி பாரிஸ் 2024 ஒலிம்பிக் கால்பந்தாட்டத்தில் ஏ குழுவில் முன்னாள் உலக சம்பியன் பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, நியூஸிலாந்து ஆகிய அணிகளுடன் இணைந்துகொள்ளும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை...

2024-09-18 16:51:08
news-image

நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள்...

2024-09-18 12:34:13
news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-17 22:27:53
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41